திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வளர்ந்த பிறகு வாலாட்டனும்னு நினைத்த தனுஷ்.. ஒத்த வார்த்தையில் சர்வத்தையும் அடக்கிய ஹீரோ

Actor Dhanush: தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்த கையோடு மொட்டை அடித்து அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள தனது 50 வது படத்தை தனுஷ் இயக்கி, நடிக்க இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாகவும் படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

அதாவது தனுஷ் வுண்டர் பார் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார். தனது 3 படத்தின் மூலம் இந்த நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு சில வெற்றி படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்த நிலையில் சில வருடங்களாக படங்களை தயாரிக்காமல் இருக்கிறது. தனது நண்பருக்காக தனுஷ் ஒரு படத்தை தயாரிக்க முற்பட்டார்.

Also Read : என்ன கர்ப்பமா ஆக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கோ.. சந்தேகத்தில் தனுஷ் பட நடிகை போட்ட கண்டிஷன்

அதாவது ஒரு காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவருமே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் தனுஷ் தனது 3 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு அவரை கதாநாயகனாக வைத்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை தயாரித்தார்.

ஆனால் வளர்த்த கெடா மாறில் முட்டியது போல் சிவகார்த்திகேயன் தனுஷையே ஒரு கட்டத்தில் எதிர்க்க ஆரம்பித்தார். இதன் ஆரம்ப புள்ளி என்னவென்றால் காக்கிச்சட்டை படத்திற்கு பிறகு தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தை சிவகார்த்திகேயன் வைத்து தயாரிக்க தனுஷ் முடிவு செய்திருந்தார்.

Also Read : தனுஷ், சிம்பு வேண்டவே வேண்டாம்.. ரீமேக் படங்களை ஒதுக்கி 27 அவார்டுகளை குவித்த இயக்குனர்

இது பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்கும்போது பெருந்தொகையை சம்பளமாக கேட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதனால் தனுஷ் கோபத்தில் உன்னை வளர்த்து விட்ட என்னிடமே பேரம் பேசுகிறாயா, வளர்ந்து வந்த பிறகு இப்போது வாலாட்ட மறுக்கிறாயா என தனுஷ் எண்ணி உள்ளார்.

இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் சில விஷயங்களில் தனுஷை அவமதிப்பது மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நிரந்தரமாகவே பிரிந்து விட்டனர். சிவகார்த்திகேயன் வளர்ந்த பிறகு ஏணியை இடறி விடுவது தவறான செயல் தான்.

Also Read : வெற்றிமாறன் கேட்டும் டைட்டிலுக்கு முடியாது என கூறிய ஹரி.. தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்

Trending News