அதிதி ஷங்கருக்கு கொடுத்த பெரிய டிமிக்கி.. அல்வாவோட மகிமை தெரியாமல் அறியா பிள்ளை எல்லாத்தையும் நம்புது

Actress Aditi Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஆடல், பாடல் என ரசிகர்களை குஷிப்படுத்தினார். அடுத்ததாகவே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பெரிய ஸ்கோப் எதுவும் இல்லை. படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார். மேலும் படத்தையும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். ரொம்ப சீரியஸான கதைகளம் கொண்ட இப்படத்தை காமெடி செய்து வைத்திருக்கிறார்கள் என பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Also Read : பெண் பிள்ளைகளால் கண்ணீர் வடித்து அசிங்கப்படும் அப்பா பிரபலங்கள்.. 2 மகள்களால் பறிபோன ஷங்கரின் நிம்மதி

அதிதி இந்த படத்தில் ஏன் நடித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் இயக்குனரின் மகள் என்பதால் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் ஊறிப் போய் இருப்பார். கதை கேட்காமல் கண்டிப்பாக நடித்து இருக்க முடியாது, அப்படி இருக்கும்போது வேண்டுமென்றே மாவீரன் படத்தில் நடித்த தனது பெயரை கெடுத்துக் கொள்ள என்ன விஷயம் என்றது தெரிய வந்துள்ளது.

அதாவது மாவீரன் கதையை கேட்டுவிட்டு முதலில் அதிதி ஷங்கர் மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனால் அதன் பிறகு நீங்கள் தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்தால் அடுத்த படத்திலும் உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

Also Read : நிம்மதியான சாப்பாடு, உறக்கம் இல்லாமல் தவிக்கும் ஷங்கர்.. 2 மகள்களால் கண்ணீர் வடிக்கும் சோகம்

அதுவும் அடுத்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், அதன் மூலம் பெரிய இடத்திற்கு செல்லலாம் என்று அதிதி மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இப்படக்குழு ஆசை வார்த்தை சொல்லி அதிதிக்கு அல்வா கொடுத்திருக்கிறது. விவரம் தெரியாத பிள்ளையாய் எல்லாத்தையும் நம்பி ஏமாந்து போய்விட்டார்.

மேலும் மாவீரன் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக அதிதிக்கு நிறைய பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாம். ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு அவரது முகத்தில் எந்த ரியாக்ஷனும் வரவில்லை, அதோடு மட்டுமல்லாமல் வெறுமனே இவரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அதிதிக்கு பட வாய்ப்பு தர மறுத்து வருகிறார்கள்.

Also Read : அப்பாவின் டார்ச்சர் தாங்கல.. சிக்காமல் சிட்டாய் பிறந்த அதிதி சங்கர்