இந்தியன் 2 வில் வேண்டா வெறுப்பா கமிட்டான உதயநிதி.. ஒத்த படத்தின் மூலமா அடிக்கப் போகும் பெத்த லாபம்

Indian 2 Udhayanidhi: கமல் நடித்த எத்தனையோ படங்கள் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்திருக்கிறது. அதில் சமூகத்தில் ஏற்படும் ஊழல்களை தட்டிக் கேட்கும் தாத்தாவாக வந்து மிரட்டிய படம் தான் இந்தியன். இப்படம் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இதனுடைய இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஆனால் இப்படம் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.

இடையில் நிறைய பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்ததால் இழுபறியாக இருந்து, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 220 கோடி அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பதற்கு உதயநிதியை கேட்டிருந்தார்கள். ஆனால் அவரோ இதை எடுக்கவா வேண்டாமா என்று பல யோசனையில் வேண்டா வெறுப்பாக, கமலின் நட்புக்காக மட்டுமே ஒத்துக் கொண்டார்.

ஆனால் அவர் ஒத்துக் கொள்ளும் போது இப்படத்தின் பட்ஜெட் 170 கோடிக்குள் முடிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஆனால் தற்போது வரை மட்டுமே 220 கோடி வரை தாண்டி உள்ளது. இதற்கிடையில் உதயநிதி இப்படத்தில் தெரியாத்தனமாக கமிட் ஆகி விட்டோமோ என்று பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இப்பொழுது நிலவரப்படி இப்படத்தின் மூலம் உதயநிதிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். அதாவது இந்தியன் 2 படப்பிடிப்பு சுமூகமாக முடிந்து விட்டது. ஆனால் அதற்குள் இப்படத்தை நெட்பிலீக்ஸ் 220 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதாவது உதயநிதி இந்த படத்திற்கு என்ன செலவு செய்தாரோ அதை தற்போதை பெற்றுவிட்டார்.

இதற்குப் அப்புறம் ஓவர்சீஸ், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் உரிமைகள் மற்றும் சேட்லைட்கள், அதற்குப் பிறகு தியேட்டர்கள் என இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை மட்டுமே வைத்து கணக்கு பார்த்தால் கண்டிப்பாக உதயநிதிக்கு 1000 கோடிக்கு மேல் பெருத்த லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத உதயநிதி தற்போது சந்தோஷத்தில் மிதக்கிறார். இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும், இந்தியன் 2 வை தொடர்ந்து சங்கர் இந்தியன் 3யும் எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஆக மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் இப்படத்தின் லாபம் 1500 கோடி லாபம் கிடைக்கும் என்று தற்போதைய கணிப்பின்படி இருக்கிறது. இந்த ஒத்த படத்தின் மூலம் உதயநிதி இதுவரை பார்க்காத லாபத்தை பார்க்கப் போகிறார்.