எதிர்நீச்சல் சீரியலை பற்றி குணசேகரனிடம் பேசிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

Actor Rajinikanth And Gunasekaran: தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் ஒரே நாடகம் கவர்ந்து விட்டது என்றால் அது சன் டிவியில் வருகின்ற எதிர்நீச்சல் சீரியல்தான்.  அதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு பிடித்த மாதிரி விறுவிறுப்பாக கதைகள் அமைவது தான். அத்துடன்  ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் தினமும் இந்த நாடகத்தை பார்த்துவிட்டு தான் தூக்கமே வரும் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி வருகிறது. இந்த ஒத்த நாடகம் தான் சன் டிவியில் மொத்த டிஆர்பி ரேட்டையும் அதிகரித்து இருக்கிறது. அதனாலேயே இதுவரை ஆறு நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி இருந்த இந்த நாடகம் தற்போது ஞாயிற்றுக் கிழமையும் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் இந்த நாடகத்தில் குறை என்று எதுவும் சுட்டிக் காட்ட முடியாத அளவிற்கு மக்களுக்கு பிடித்தமாக இருக்கிறது. தற்போது இது சம்பந்தமாக இயக்குனர் திருசெல்வம் இன்று பேட்டி அளித்திருக்கிறார். அதாவது இந்த நாடகத்திற்கு வருகின்ற வரவேற்பை நினைத்து எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

அதே மாதிரி இப்பொழுது நான் பெருமையாக நினைப்பது, இந்த நாடகத்திற்கு ரஜினி அவர்களும் பாராட்டியது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நான் நினைக்கிறேன். அதாவது இந்த நாடகத்தில் குணசேகரன் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு கேரக்டர். மேலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திலும் குணசேகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் குணசேகரனை சந்தித்த ரஜினிகாந்த், எதிர்நீச்சல் நாடகத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அதாவது இந்த நாடகத்தை என் குடும்பத்தில் அனைவரும் தினந்தோறும் தவறாமல் பார்த்து வருகிறார்கள். அத்துடன் எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்பொழுது இந்த நாடகத்தை பார்த்து வருகிறேன். ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதை தற்போது இயக்குனர் திருசெல்வம் அளித்த பேட்டியில் கூறி, ஏற்கனவே கோலங்கள் நாடகம் எடுத்த பொழுது ரஜினி இவருக்கு அழைப்பு கொடுத்து 45 நிமிடம் பேசி பாராட்டி இருக்கிறார். அத்துடன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கும் உங்களுடைய பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறியுள்ளார்.