தியேட்டரில் 500 நாட்கள் மேல் ஓடி சாதனை கண்ட 3 படங்கள்.. பாலச்சந்தர், கமல் கூட்டணியில் வியந்த பிரம்மாண்டம்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் அனுபவத்தால் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான் தான் கமலஹாசன். இவரின் படங்கள் என்றாலே அதற்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் இவர் நடிப்பில் 500 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை கண்ட 3 படங்களை பற்றி இங்கு காண்போம்.

தற்பொழுது எல்லாம் ஒரு படம் வெளிவந்து திரையில் 100 நாள் ஓடுவதை பெரிதாய் பார்க்கின்றோம். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி நடிப்பில் வெளிவரும் படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பை பெற்று இன்றும் ரீ ரிலீஸ் செய்து பட்டைய கிளப்பி வருகிறது.

அவ்வாறு இருக்க, மூன்று தலைமுறை பார்த்து வரும் கமல், தமிழ் சினிமாவில் பெற்ற அனுபவத்தை யாராலும் ஈடு கட்ட முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் ஆராய்ந்து நுணுக்கங்களை கற்று தேர்ந்தவர் கமலஹாசன். அதைக் கொண்டே இவர் நடிப்பில் வெளிவந்த எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்று இருக்கிறது.

அவ்வாறு 1978 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில், காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாய் கதை அமைந்து வெளிவந்த படம் தான் மரோ சரித்ரா. இப்படத்தில் கமலஹாசன், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஒரு தமிழன், தெலுங்கு பெண் மீது கொண்ட காதலை உணர்த்தும் காவியமாய் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் பாலச்சந்தர்- கமல் கூட்டணியில் உருவான இப்படம் 500 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் வேட்டை அடைந்தது. அதை தொடர்ந்து 1981ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஏக் துஜே கேலியே ஒரு ஹிந்தி படமாகும். இப்படத்தில் கமலஹாசன், மாதவி, ரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் சுமார் 700 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஒடி சாதனை அடைந்த மரோ சரித்ரா படத்தின் மறு பதிவாகும்.

அதை தொடர்ந்து 1983ல் கே விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சாகர சங்கமம். இப்படத்தில் கமல், ஜெயப்பிரதா, சரத்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தேசிய நடனமான பாரத நாட்டியம், குச்சிப்புடி, கத்தக் போன்ற அனைத்தையும் கற்று தேர்ந்த கலைஞனாய் கமல் இப்படத்தில் கதாபாத்திரம் ஏற்றி தன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். இப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று 500 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.