ரிலீசுக்கு முன்னாடி கலெக்ஷன் பார்த்துடனும்.. உசுர கொடுத்து மேடையில் ரஜினி பேசியதன் காரணம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரமோஷனை தயாரிப்பு தரப்பு கடந்த சில வாரங்களாகவே மும்முரமாக செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.

மேலும் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் ஆக்சன் அவதாரத்தை காணவும் ரசிகர்கள் இப்போது பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கூட வரலாறு காணாத சாதனை பெற்று வருகிறது.

அதிலும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இப்படத்திற்கு முதல் மூன்று நாட்கள் எந்த தியேட்டர்களிலும் டிக்கெட் கிடையாது. அந்த அளவுக்கு ஜெயிலர் மொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருக்கிறது. இதற்காகத்தான் சூப்பர் ஸ்டாரும் கடுமையாக உழைத்தார். எப்படி என்றால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

அதிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் உசுர கொடுத்து பேசியதுதான் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தது. அது மட்டுமின்றி விஜய்யின் பீஸ்ட் பற்றியும், பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க வேண்டும் எனவும் பாசிட்டிவாக தலைவர் பேசியது ஜெயிலர் படத்திற்கான மிகப்பெரும் ப்ரமோஷன் ஆக அமைந்தது.

ஆனால் இதற்குப் பின்னணியில் வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது முடிந்தவரை ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே கலெக்ஷனை டிக்கெட் முன்பதிவில் பார்த்து விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம். ஏனென்றால் படம் வெளியான பிறகு நிலைமை எப்படி வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாம்.

அதாவது இப்போது இருக்கும் அலப்பறை எல்லாம் ரஜினி என்ற மனிதரை திரையில் காண்பதற்காகத்தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் சரவெடியாக இல்லை என்பது ரஜினிக்கு தெரிந்து விட்டதாக திரையுலகில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. அதனாலயே அவர் பிளான் போட்டு ஜெயிலர் மேடையை தெறிக்க விட்டிருக்கிறார். அது ஒர்க் அவுட் ஆன நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது நாளை தெரிந்து விடும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் - கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →