பகையை மனதில் வைத்து பரப்பும் நெகட்டிவிட்டி.. ஜெயிலருக்கு கிடைக்கும் மோசமான விமர்சனம்

Jailer: கடந்த ஒரு மாதமாகவே ரசிகர்கள் பெரிதும் பேசிக்கொண்டிருந்த ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதிகாலை முதலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ரஜினி திரும்ப மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அவருடைய ஸ்டைல், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அனிருத்தின் இசை ஜெயிலர் படத்திற்கு கூடுதல் வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒருபுறம் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஜெயிலருக்கு வந்து கொண்டிருக்கிறது.

மற்றொருபுறம் வேண்டுமென்றே மோசமான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். அதாவது கடந்த சில மாதங்களாகவே ரஜினியின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு விஜய் ஆசைப்படுகிறார் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் இதற்கு எந்த மறுப்பு மற்றும் ஆதரவு எதுவுமே கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே ஒரு இணைய போர் நடந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் இப்போது ட்ரெண்டை மாற்றி விட்டனர். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி இருந்தாலும் ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி உள்ளதால் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல் பாதி பரவாயில்லை இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக உள்ளதாக ட்விட்டர் விமர்சனம் கொடுத்து வருகிறார்கள். மேலும் ஜெயிலர் படம் தோல்வி என்பது போல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்போது சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் பாசிட்டிவ் விட நெகட்டிவ் வேகமாக பரவி வருகிறது.

ஆகையால் விஜய் ரசிகர்களின் விமர்சனங்களால் ஜெயிலர் படம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் முத்துவேல் பாண்டியாக தரமான என்ட்ரியை தான் ரஜினி கொடுத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன்மூலம் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.