சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார் விஜய் ஹீரோயின்.. திடீரென்று காணாமல் போனவரை தேடிப் பிடித்த SK

Actor Sivakarthikeyan: சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர்  சினிமாவில் ஒரு சில ஏற்ற இறக்கங்களை சந்தித்ததால் இப்போது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் தன்னுடைய படத்திற்கான இயக்குனர்களையும்  பட குழுவையும் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கிறார். சிவகார்த்திகேயன் சினிமாவில் பல வருடங்களாக தொலைந்து போன நடிகையை இப்போது தேடி கண்டுபிடித்து தன்னுடைய படத்தில் வில்லியாக நடிக்க வைத்துள்ளார்.

நடிகை இஷா கோபிகர் 90களில் ரசிகர்களுக்கு கனவுகன்னி ஆக இருந்தவர், இவர் விஜய் உடன் ‘நெஞ்சினிலே’, அரவிந்த்சாமி உடன் ‘என் சுவாசக் காற்றே’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் மட்டுமல்ல இன்னும் பல தமிழ் படங்களிலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்தார்.  

ஒரு கட்டத்தில் இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்பு திடீரென்று காணாமல் போய்விட்டார். தற்பொழுது இவர் மீண்டும் தமிழுக்கு நடிக்க வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும்  அயலான் படத்தில் வில்லியாக நடிக்கிறார் இஷா கோபிகர்.

25 வருடத்திற்கு முன்பு இவரை பார்த்த ரசிகர்களுக்கு இப்போது எப்படி இருக்கிறார் என்ற ஆர்வம்  அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த படத்தை பார்த்தால் தான் அவர் இப்போது எப்படி மாறியிருக்கிறார் என்பது தெரியும். வேலையில்லா பட்டதாரி படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படி கஜோல் என்ட்ரி கொடுத்தாரோ, அதேபோலவே இப்போது சிவகார்த்திகேயன் படத்தில் இஷா கோபிகர் வில்லியாக தனது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கப் போகிறார்.

ஏற்கனவே அயலான் படத்தில் மனிதருக்கும் ஏலியனுக்கும் இடையேயான நட்பை தான் கதைக்களமாகக் கொண்டிருப்பதால், இந்தப் படத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கின்றனர். அதில் தொலைந்து போன நடிகையும் என்ட்ரி கொடுப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.