5 வருடத்திற்கு பிறகு வெளிவரும் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படம்.. தட்டு தடுமாறி லாக் செய்த ரிலீஸ் தேதி

Actor Siva karthikeyan: சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்து மக்களால் கொண்டாடப்பட்ட படம் தான் மாவீரன். இந்நிலையில் பல வருடமாய் கிடப்பையில் போடப்பட்ட இவரின் படம் தற்பொழுது தட்டு தடுமாறி ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ளது.

சமீபத்தில் ஃபேண்டஸி படமாய் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் மாவீரன். அவ்வாறு இருக்க 2016ல் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்த படம் தான் அயலான். அறிவியல் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு உருவாக இருந்த இப்படம் பல தடைகளை சந்தித்தது.

அதுவும் குறிப்பாக கோவிட் காலத்தில் தொடங்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பின் இப்படத்திற்கான விஷ்வல் எஃபெக்ட்ஸ் வேலைபாடு காரணமாகவும் பல வருடங்களாக கிடப்பையில் போடப்பட்ட இப்படம் சமீபத்தில் படபிடிப்பை தொடங்கியது.

சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், பானுப்ரியா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். பல காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்த இப்படம் தட்டு தடுமாறி ஒருவழியாக படப்பிடிப்பை முடித்துள்ளது.

சுமார் 4500 விஷ்வல் எஃபெக்ட்ஸ் கொண்ட காட்சிகளை படப்பிடிக்க தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சுமார் ஐந்து வருடத்திற்கு பிறகு முடிவிற்கு வந்துள்ளது. மேலும் படத்தில் தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஏலியன்ஸ் உடன் கைகோர்க்கின்றார் ஹீரோ சிவகார்த்திகேயன்.

இத்தகைய பிரம்மாண்டத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் விதமாய் இப்படத்தின் விஷ்வல் எஃபெக்ட்ஸ் ஹாலிவுட் ரேஞ்ச் இருக்கு மிரட்டல் விடும் எனவும் கூறப்படுகிறது. பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாய் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.