Actor Rajinikanth: 40 வருட சினிமாவில் கிட்டத்தட்ட 170 படங்களில் நடித்து தற்போது வரை ஹீரோவாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அனைவர் மனதிலும் முதலிடத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். வில்லனாகவும், காமெடியாகவும், ஹீரோவாகவும் பல பரிமாணங்களில் நடித்து எனக்கான வழி தனி வழி என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
அப்படிப்பட்ட இவர் 1978 ஆம் ஆண்டு மிகவும் பிசியாக கிட்டத்தட்ட 14 படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களில் அனைத்து கதாபாத்திரத்தையும் சவாலாக ஏற்று நடித்துக் கொடுத்திருக்கிறார். அத்துடன் ஒரு நாளில் மட்டுமே ஐந்து படங்களில் உள்ள காட்சிகளை நடித்துக் கொடுத்து அந்த வருடத்தில் மொத்தம் 14 படங்களை முடித்திருக்கிறார்.
அதே சமயம் தொடர்ந்து ஒரு வேலையை செய்யும் போது கண்டிப்பாக ஒருவருக்கு பிரச்சினை ஏற்படும். அதே போல தான் அந்த ஆண்டு ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்த ரஜினிக்கு மனரீதியாக சில பிரச்சனைகளுக்கு ஆளாகி உடல் அளவிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் இவருடன் நடிப்பதற்கு நடிகைகள் பயத்துடனே நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு எதற்கெடுத்தாலும் கோபப்படவும், பார்ப்பவர்களிடம் சண்டை போடும் அளவிற்கு நடந்து கொள்வதும் இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து இவரிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு படத்தில் ரஜினியுடன் வாள் சண்டை போடும் காட்சி கமலுக்கு வந்திருக்கிறது.
ஆனால் ரஜினியின் நிலைமை எந்தவாறு இருக்கு என்று கணக்கிடவே முடியாத அளவிற்கு குளறுபடியாக இருந்திருக்கிறது. அதனால் ரஜினியுடன் வாள் சண்டை போடுவதற்கு கமல் பயந்திருக்கிறார். ஏனென்றால் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் எங்கே உண்மையாகவே நம்மளை குத்தி விடுவாரோ என்ற ஒரு தயக்கம் அவருக்கு ஏற்பட்டதால் ஒரே நாளில் சண்டைக்காட்சியை முடிக்குமாறு கமல் கேட்டிருக்கிறார்.
இந்த வாள் சண்டை மட்டுமே மூன்று நாள் எடுக்கப் போவதாக இருந்ததாம். ஆனால் ரஜினியின் சூழ்நிலை சரியில்லாததால் ஒரே நாளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ரஜினி அந்த ஆண்டு மட்டுமே முரண்பாடாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது யார் என்று அனைவருக்கும் நிரூபித்துக் காட்டி விட்டார். அதனால் தான் இவரால் 72 வயதிலும் ஹீரோவாக நடிக்க முடிகிறது.