Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத பல விஷயங்கள் ஆச்சரியமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீவானந்தம் சமூகப் போராளியாகவும், மக்களுக்காக பாடுபடும் நலன் விரும்பியாகவும் இதுவரை காட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில் இளம் வயதில் ஈஸ்வரியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டார்.
ஆனால் இவருடைய காதல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே முடிவடைந்த நிலையில், அந்த காதலை மனதில் சுமந்து கொண்டு சமூக அக்கறை மீது முழு கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது போல் கதை அமைந்தது. ஆனால் நேற்றைய எபிசோடில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள் வந்தது. அதாவது தோழர் என்று ஒரு கூட்டத்தை ஆரம்பித்து அதில் தலைவராக செயல்பட்டு வரும் ஜீவானந்தத்திற்கு வேற எந்த குடும்பமும் இல்லாத போல் இருந்தார்.
Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!
இதற்கிடையில் பர்கானா சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது மாதத்தில் தோழர் இப்படிதான் இரண்டு நாட்கள் எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்று சொல்லாமல் போய்விடுவார். அதே போல் தான் இப்பவும் போகிறார் என்று கௌதமிடம் சொல்லி இருந்தார். அதை பார்க்கும் பொழுது இவர் எங்கே போகிறார் என்று யோசித்து நிலையில் இவருக்கும் ஒரு அழகான குடும்பம் இருக்கிறது.
அதில் இவருடைய மனைவி கயல்விழி மற்றும் மகள் வெண்பா இவர்களை காட்டி அவர்கள் மீது பாசத்தை கொட்டும் ஒரு எதார்த்தமான தந்தையாக ஜீவானந்தம் இருந்தார். இவர்கள் தான் ஜீவானந்தத்திற்கு மிகப்பெரிய சொத்து, உயிருக்கு உயிராக அவர்கள் மீது பாசத்தை கொட்டி வருகிறார் என்று ஜனனிடம் ஒரு பெரியவர் கூறியிருப்பார்.
Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்
அவர் சொல்வதைப் போல் அத்தனையும் உண்மைதான் என்பதற்கு ஏற்ப, மனைவி மகளை பார்க்க வரும் நேரத்தில் ஜீவானந்தம் அவருடைய குடும்பத்தை நினைத்துப் பார்க்கும் காட்சிகளாக ” வா வா என் தேவதையே” என்ற பாடலுடன் ஒரு அழகான குடும்பத்தை காட்டி இருந்தார்கள். ஆனால் இதில் தான் ஒரு பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இப்படி ஒரு அழகான குடும்பம் ஜீவானந்தத்திற்கு இருக்கிறது என்று தெரிந்தால் இனி குணசேகரன் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை பண்ணுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதில் குணசேகரன் பிளான் பண்ணிய படி ஜீவானந்தம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், இவருடைய குடும்பத்தை பகடைக்காயாக வைத்து சுக்கு நூறாக உடைக்க திட்டம் போடுவார்.
ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி