Actor Kamal: ஷங்கர் இயக்கத்தில் கமலின் இந்தியன் 2 படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அவ்வாறு கமலின் அடுத்த பரிமாணங்களை பார்க்கப்படும் இவ்வேளையில், இவரின் படம் ஒன்று வசனம் இல்லாமல், பாடல் இல்லாமல் இடம்பெற்று வெற்றி பெற்றதன் தகவலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
படத்திற்கு முக்கியமாக பார்க்கப்படுவது பாடலும், வசனமும் அவற்றை இல்லாமல் ஒரு படம் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இது போன்ற புது முயற்சிகளை செய்து காட்டும் வல்லமை கொண்டவர் தான் கமல். அவ்வாறு படத்திற்கு பேசும் படம் என பெயர் வைத்துவிட்டு, வசனம் இல்லாமல் செய்து காட்டிய திறமை கமலை சேரும்.
Also Read: விஜய்க்கு அக்கட தேசத்திலிருந்து வந்த கோரிக்கை.. ரஜினியை குறித்து, நஷ்ட ஈடு கேட்ட அவலம்
அவ்வாறு 1987 ஆம் ஆண்டு கமல், இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் உடன் இணைந்து வெற்றி கண்ட படம் தான் பேசும் படம். இப்படத்தில் அமலா, பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் என பல்வேறு அம்சங்களும் இப்படத்தில் சிறப்பாய் அமைந்திருக்கும்.
வசனம் இல்லாமல் இடம் பெறுவது சார்லி சாப்ளின் நகைச்சுவை படங்கள் தான், அவற்றைப் போன்று வசனம் இல்லாமல் முயற்சி செய்து சைலன்ட் மூவியாய் தெறிக்க விட்ட இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படத்தில் வேலையில்லாத கமலஹாசன் ஒவ்வொரு நாளும் போராடி கழிக்கும் விதமாய் கதை கொண்டு செல்லப்பட்டு இருக்கும்.
மேலும் தொழிலதிபருக்கு மாற்றாய் கமல் இடம் பெற்று சிக்கலில் மாட்டிக் கொள்வது போல் அமைய பட்டிருக்கும். இதற்கு நடுவில் அமலாவுடன் மேற்கொள்ளும் காதல் காட்சிகள் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். மேலும் வைத்தியநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார்.
இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது உண்மை, ஆனால் அதற்கு ஈடாக பி ஜி எம் இல் மொத்தமாய் ஸ்கோர் செய்யப்பட்டிருக்கும். இவை கன்னட மொழி படமாக புஷ்பக விமானம் என டைட்டில் வைத்தார் கமல். அதை தொடர்ந்து இப்படம் தமிழில் பேசும் படம் என பெயரிடப்பட்டது. வசனம் இல்லாததால் இப்படம் எல்லா மொழிகளிலும் பெயர் மாற்றங்களுடன் வெளிவந்தது. மேலும் இப்படம் 245 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் வசூலாய் 37 மில்லியனை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.