Rajini Speech: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படம் அனைவரது எதிர்பார்ப்பையும் கிளப்பி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 28ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும், கோடான கோடி ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.
இதனை அடுத்து ரஜினி அவருடைய உரையாடலை தொடங்கிய நிலையில் ஜெயிலர் படத்தை மற்றும் பல விஷயங்களையும் பகிர்ந்து வந்தார். அதில் இளைஞர்களுக்கு சரியான ஒரு அட்வைஸை கொடுத்திருக்கிறார். அதாவது இப்பொழுது வீட்டுக்கு ஒரு குடிமகன் இருக்கிறார்கள் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.
இதை நினைக்கும் பொழுது நாடு எந்த அளவிற்கு கெட்டுப் போய் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் இதை தவிர்க்கும் விதமாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன் என்று ஆரம்பித்து, நீங்கள் வளர வேண்டுமென்றால் தயவுசெய்து இதை ஃபாலோ பண்ணுங்க என்று சொல்லியிருக்கிறார்.
அத்துடன் நான் இன்னும் வளர முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்னுடைய குடிப்பழக்கம் தான். அந்தக் குடிப்பழக்கத்தை மட்டும் நான் நிப்பாட்டி இருந்தால் தற்போது எங்கேயோ போயிருப்பேன். அதனால் என்னுடைய அனுபவத்தின் மூலம் நான் சொல்லுவது தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள்.
உங்களுக்கு குடிக்க தோன்றினால் நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுங்கள். இப்படியே பத்து நாளைக்கு செஞ்சுட்டு வந்தீங்கன்னா குடிப்பழக்கத்தை மறந்து விடுவீர்கள் என்று அவருடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக இவருடைய கோடான கோடி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக அமையும்.
மேலும் இவர் கொடுத்த அறிவுரையை கேட்டு அங்கிருந்து அனைவரும் கைத்தட்டி அவர்களுடைய பதிலை கொடுத்திருக்கிறார்கள். இவரை ஃபாலோ பண்ணும் கோடான கோடி இளைஞர்களுக்கு ரஜினி சொல்லிய இந்த அறிவுரை பாராட்டப்பட வேண்டிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.