சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

18வது நாள் கடந்து ஜெயிலர் செய்த மொத்த வசூல் ரிப்போர்ட்.. தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம் போடும் ரஜினி

Actor Rajini In Jailer Vasool Report: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வந்த திரைப்படம் ஜெயிலர். இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் விஜய்க்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. அந்த வகையில் பலருக்கும் நெல்சன் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதையெல்லாம் சவாலாக எடுத்து ரஜினி இவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரஜினிக்கு ஏற்ற மாதிரி படத்தை கொடுத்து விட்டார். தற்போது ரஜினிக்கு இணையாக டைகர் முத்துவேல் பாண்டியன் கேரக்டரும் பிரபலமாகிவிட்டது. இது இவருக்கு மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

Also read: திருட்டு காசுல படம் எடுக்கிற தங்கர் பச்சான் , ரஜினிய பத்தி பேசுன நாரடிச்சிடுவோம்.. எரிமலையாக வெடித்த பயில்வான்

முக்கியமாக கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு தமிழ்நாட்டில் அங்கீகாரம் கொடுத்த படமாக இது அமைந்துவிட்டது. அத்துடன் இதில் வில்லனாக கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு நடித்த விநாயகனுக்கும் அதிகளவில் பாராட்டு கிடைத்திருக்கிறது. இப்படி இந்த படம் பட்டி தொட்டி எல்லா பக்கமும் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரையரங்குகளில் வெளிவந்து 18 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் அனைத்து பக்கங்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக தியேட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் மொத்த வசூல் ஆன ரிப்போர்ட்டை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சன் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தது. அதில் 525 கோடி வசூல் எட்டி உள்ளதாக வெளியிட்டு இருந்தார்கள்.

Also read: முஸ்லிம்க்கு எதிராக படம் எடுக்கத் தூண்டிய தயாரிப்பாளர்.. ரஜினியை மோசமாக விமர்சித்த பிரபலம்

இதனைத் தொடர்ந்து தற்போது 18 நாளில் 607.29 கோடி வசூல் சாதனை படைத்து ரஜினியின் மிகப்பெரிய வெற்றி படமாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ்நாட்டில் இதுவரை 218 கோடி வசூல் ஆகி உள்ளது. இப்படி தொடர்ந்து வெற்றி பெற்று தனிக்காட்டு ராஜாவாக ரஜினி அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதற்காக படுஜோராக ப்ரமோஷன் லியோ படத்திற்கு நடக்கப் போகிறது. கண்டிப்பாக விஜய் படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும், லோகேஷின் கதை விறுவிறுப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கு போட்டியாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் களமிறங்க இருக்கிறது.

Also read: 30 ஆயிரம் சம்பளத்தில் இருந்து 5 மடங்கு ரஜினியை உயர்த்திய படம்.. வியாபாரத்தை கற்றுக்கொடுத்த முதலாளி

- Advertisement -spot_img

Trending News