Lokesh In Leo Movie: ஜெயிலர் படத்தின் ஆரவாரத்தை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தை தான். அந்த வகையில் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளையும் அலங்கரிக்க வருகிறது.
இந்த நாளை தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட வேண்டும் என்று படக்குழு மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் உலக அளவில் கிட்டதட்ட 500 கோடி வசூலை பெற்றுக் கொடுத்தது. அதே மாதிரி இப்படத்திலும் லோகேஷின் கதை மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரணத்திற்காக லியோ படம் இதுவரை வந்த படங்களில் உள்ள சாதனையை முறியடிக்கும் விதமாக இமாலய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட லியோ படம் 1000கோடி வசூலை பெற்று விடும் என்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
அதற்கேற்ற மாதிரி பத்திரிகையாளர் ஒருவர் லோகேஷிடம் ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார். அதாவது லியோ படம் கண்டிப்பாக 1000 கோடி வசூலை பெற்று விடுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு லோகேஷ் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். என்னுடைய முழு கவனமும் அந்த ஆயிரம் கோடி மேல் கிடையாது.
என்னுடைய படத்திற்கு 150 ரூபாய் கொடுத்து பார்க்க வருபவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் நான் எடுக்கக்கூடிய முயற்சி என்று கூறியிருக்கிறார். எப்படி இருந்தாலும் 150 ரூபாய் கொடுத்து வருபவர்களுக்கு லியோ படம் பிடித்து விட்டாலே கன்ஃபார்ம் ஆயிரம் கோடி தொட்டுவிடும் என்ற ஒரு நம்பிக்கை லோகேஷுக்கு இருக்கிறது.