வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கிரண் காதலில் விழுந்த நடிகர்.. மொத்த கேரியரும் போச்சு என இப்ப வரை புலம்பும் ஜெமினி பட மனிஷா நட்வர்லால்

Actress Kiran: நடிகை கிரண், சீயான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கோலிவுட்டின் அடுத்த குஷ்பு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இவர் பெயர் பெற்றார். குஷ்பூவை போலவே சினிமாவில் இவர் நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கிரணுக்கும் அடுத்தடுத்து அஜித் மற்றும் கமலஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித்துடன் இவர் சேர்ந்து நடித்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. கிரண் முன்னணி ஹீரோயினாக நடிக்க, மீனா இந்த படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த அளவுக்கு கிரணுக்கு அப்போது மார்க்கெட் இருந்தது.

Also Read:மும்பையில் பிறந்து பாலிவுட்டில் ஜெயிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்ஸ்.. பாலிவுட் கதவுகள் மூடப்பட்ட காஜல் அகர்வால்

இப்படி அடுத்தடுத்து வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்த நடிகை கிரண், திடீரென திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இது எல்லோருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. மார்க்கெட் குறைந்ததால் தான் கிரண் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இவர் மார்க்கெட் மொத்தமாக சரிவதற்கு பிரபல நடிகருடனான காதல் தான் காரணமாக இருந்திருக்கிறது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகை கிரண் இணைந்து நடித்த படம் தான் அன்பே சிவம். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் ரொம்பவும் நெருக்கமாக பழகி இருக்கிறார்கள். திருமணம் செய்யாமலேயே லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் கிரண், கமலுடன் இருந்து இருக்கிறார்.

Also Read:ஓவர் குடியால் பூசணிக்காய் போல் மாறிய 5 நடிகைகள்.. போதைய போட்டா சொர்ணாக்கா லெவல் காட்டும் கிரண்

இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருந்த கிரண் திடீரென கமல் போன்ற ஹீரோவுடன் ஜோடி சேர்ந்ததால் ஒரு பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது என்றால், மறுபக்கம் கமலுடன் ஏற்பட்ட காதலால் கிரணின் மொத்த பெயரும் சினிமாவில் கெட்டுப் போய்விட்டது. இதனால் அவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைந்தன. கடைசியாக ஹீரோயின் ஆக பிரசாந்தின் வின்னர் மற்றும் விஜயகாந்தின் தென்னவன் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக மாறிய கிரணுக்கு அப்போதும் வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் போனது. இதற்கு காரணம் அவருடைய அதிக உடல் எடை தான். பல வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த கிரண் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Also Read:விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

Trending News