செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பிக் பாஸ் சீசன் 7ல் கமல் வாங்கும் சம்பளம்.. காற்றுள்ள போதே கல்லாவை நிரப்பும் உலக நாயகன்

Big Boss Season 7: சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான என்டர்டைன்மெண்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசர்களை வெற்றிகரமாக நிறைவு செய்து 7-வது சீசனை வரும் அக்டோபர் 8ம் தேதி துவங்கப் போகின்றனர். இதற்கான போட்டியாளர்களை பார்த்து பார்த்து விஜய் டிவி தேர்வு செய்து வருகிறது.

இதற்கிடையில் படத்தைக் காட்டிலும் உலக நாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு அதிகமாகவே சம்பளம் வாங்கி வருகிறார். அதிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இந்த முறை அவர் தொகுத்து வழங்குவதற்கு 130 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூட போகும் விஜய் டிவி

இதனால்தான் சினிமாவிலும் அரசியலிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கமல் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் விட்டுக் கொடுக்காமல் தொகுத்து வழங்குகிறாரா என்று ரசிகர்களும் வியந்து பார்க்கின்றனர். கமலஹாசனும் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்’ என்று கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் சுமார் 65 கேமராக்கள் இருந்து போட்டியாளர்களின் நோட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், இந்த முறை 76 கேமராக்களை பொருத்தி இன்னும் சுவாரசியத்தை கூட்ட பார்க்கின்றனர். அது மட்டுமல்ல மக்கள் சார்பில் கடந்த முறை தனலட்சுமி கலந்துகொண்டு ரகளை செய்தது போல் இந்த முறை பஸ் பெண் ஓட்டுனர் ஷர்மிளா கலந்து கொள்ள போகிறார்.

Also Read: டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

இவர் ஏற்கனவே உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து காரை பரிசாக பெற்றவர். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாக்களும் இப்போது ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். இவரைப் போன்ற இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டக்கூடிய சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த தரமான போட்டியாளர்களை விஜய் டிவி தரையிறக்க உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் சூட் ஏற்கனவே முடிந்த நிலையில், விரைவில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக போகிறது. விஜய் டிவியின் சீரியல்களும் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி-யில் டாப் 5 இடத்தை பிடிக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் மலை போல் நம்பி இருக்கின்றனர். அதற்காக தான் கமலுக்கும் 130 கோடியை வாரி இறைத்துள்ளனர்.

Also Read: விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

Trending News