வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

இதுவரை தேசிய விருதை தட்டி தூக்கிய 6 ஹீரோக்கள்.. மூன்று முறை வென்ற உலக நாயகன்

National Award Winning Actors In Tamil Cinema: 69 ஆவது தேசிய விருது இந்த ஆண்டு நடந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இதற்கு முந்தைய காலங்களில் தேசிய விருது வாங்கியுள்ளனர். எந்த படத்திற்காக ஹீரோக்கள் விருதினை வாங்கி உள்ளார்கள் என்ற விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் நடிப்புக்கு பேர் போன சிவாஜி கணேசன் ஒரு தேசிய விருது கூட வாங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

எம்ஜிஆர் : முதல் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பெருமை எம்ஜிஆரை தான் வந்து சேரும். அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றிருந்தார். இவர் விதை போட அதன் பிறகு தான் மற்ற நடிகர்களும் இந்த விருதினை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்

கமலஹாசன் : உலக நாயகன் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான கமலஹாசன் எண்ணற்ற திறமைகளை உள்ளடக்கியுள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக முறை தேசிய விருது பெற்றவரும் கமல் தான். கிட்டத்தட்ட மூன்று முறை வென்று இருக்கிறார். 1982ல் மூன்றாம் பிறை, 1987ல் நாயகன், 1996ல் இந்தியன் ஆகிய படங்களுக்கு கமல் தேசிய விருதை பெற்றுள்ளார்.

விக்ரம் : கமலை போலவே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் விக்ரம். இவர் 2003 ஆம் ஆண்டு பிதாமகன் என்ற படத்திற்கு தேசிய விருதை பெற்றிருந்தார். இதில் பிணம் எரிக்கும் வெட்டியான் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பிதாமகன் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

Also Read : கோடிக்கணக்கில் கடனில் தத்தளிக்கும் 5 படங்கள்.. ஆணியே புடுங்க வேண்டாம்னு கப்பிச்சிப்புன்னு இருக்கும் விக்ரம்

பிரகாஷ்ராஜ் : எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்பவர் தான் பிரகாஷ் ராஜ். மேலும் 2008 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் படத்திற்காக பிரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்கி இருந்தார். அவருடைய நடிப்பு திறமைக்கு சரியான விருதை கொடுத்து கௌரிவித்திருந்தனர்.

தனுஷ் : நடிப்பு அரக்கனான தனுஷ் கமலுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 2 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் ஆகிய படங்களுக்கு தனுஷ் தேசிய விருது வாங்கி இருந்தார். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா : நடிகர் சூர்யா பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் 2020 ஆம் ஆண்டு தான் தேசிய விருதை பெற்றிருந்தார். அதாவது சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

- Advertisement -spot_img

Trending News