திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த முப்பெரும் தேவியர்கள்.. 5 மடங்கு நெருக்கத்தை ஒரே படத்தில் காட்டிய நடிகை

Actor Kamal: உலகநாயகன் படத்தில் ரொமான்ஸ் எந்த அளவுக்கு தூக்கலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவருடன் இணைந்து நடிக்க தயங்கிய சில நடிகைகளும் இருக்கிறார்கள். நெருக்கமான காட்சி, லிப் லாக் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்பது தான் அதற்கு முக்கிய காரணம்.

ஆனால் சில நடிகைகள் கமலுடன் ஓவர் ரொமான்ஸ் செய்தும் நடித்திருக்கின்றனர். அதிலும் 80 காலகட்டத்தில் முப்பெரும் தேவியர்களாக பார்க்கப்பட்ட நடிகைகள் கமலுடன் ரொம்பவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் தான் குஷ்பூ, கௌதமி, பானுப்ரியா.

Also read: பிக் பாஸில் 7ல் கொண்டுவந்த புது விஷயங்கள்.. நிரம்பி வழியும் ஆண்டவரின் கஜானா

அந்த காலகட்டத்தில் அதிக படங்களில் பிசியாக நடித்த இவர்கள் ரசிகர்களின் கனவு கன்னிகளாகவும் வலம் வந்தார்கள். அந்த வகையில் குஷ்பூ கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் எல்லாம் ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

அதேபோன்று கௌதமியும் கமலுடன் தேவர் மகன், குருதிப்புனல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் இவர்கள் இருவரும் வஞ்சனை இல்லாமல் தாராளமாகவே நெருக்கம் காட்டி நடித்திருப்பார்கள். இதுவே பிற்காலத்தில் அவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்வதற்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் பேசப்பட்டது.

Also read: லைக்கா, உதயநிதிக்கு கமல் வைக்கும் செக்.. வேற லெவலில் உலக நாயகன் செய்யும் ராஜதந்திரம்

இவருக்கு அடுத்தபடியாக பானுப்பிரியாவும் கமலுடன் மகராசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் ஐந்து படங்களில் காட்ட வேண்டிய நெருக்கத்தை அவர் இந்த ஒரே படத்தில் காட்டி இருப்பார். அந்த அளவுக்கு அப்படத்தில் ஏகப்பட்ட கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறாக இந்த மூன்று நடிகைகளும் மற்ற ஹீரோக்களை காட்டிலும் கமலுடன் தான் அதிக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கின்றனர். ஆனால் மற்ற இருவரை விட கௌதமி தான் கமலுக்கு ஏத்த ஜோடி என்று பேசப்பட்டார். ஆனால் இப்போது இந்த ஜோடி ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து தங்கள் வேலையை மட்டுமே பார்த்து வருகின்றனர்.

Also read: ரஜினியின் சிஷ்யன் என்பதற்காக கமலை அசிங்கப்படுத்திய லாரன்ஸ்.. மொத்த சங்கதியும் வெளியான அம்பலம்

Trending News