வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கமலுக்கு முன்பே முந்தி கொண்ட நாகார்ஜுனா.. பிக்பாஸுக்கே ட்விஸ்ட் வைத்த 2 ஆன்ட்டி நடிகைகள்

Actor Kamal: பிக்பாஸ் சீசன் தொடங்கி விட்டாலே மற்ற சேனல்கள் எல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் உலக நாயகன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதனாலேயே தற்போது தொடங்கப்பட இருக்கும் 7வது சீசனை ஆடியன்ஸ் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இதில் சில சண்டைக்கோழிகள் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவை கலக்கும் கவர்ச்சி ஆன்ட்டிகளும் பங்கேற்பார்கள் என்ற தகவல்களும் ஆர்வத்தை தூண்டியது.

Also read: சும்மாவே பேயாட்டம் ஆடும், அந்த நடிகைக்கு சலங்கை கட்டி வேடிக்கை பார்க்கப் போகும் பயில்வான்.. தாறுமாறாக சூடு பிடிக்கும் பிக்பாஸ்

ஆனால் பிக்பாஸுக்கே ட்விஸ்ட் வைத்த கதையாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சோசியல் மீடியாவை திணறடித்து வரும் கவர்ச்சி புயல் கிரண் தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அதேபோன்று ஷகிலாவும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக மாறியுள்ளார்.

இதை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் கிரண் கடந்த வருடமே பிக்பாஸில் கலந்து கொள்வார் என்று பேசப்பட்டது. ஆனால் அது நடக்காத நிலையில் இந்த சீசனில் கண்டிப்பாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

Also read: பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

இதற்கு முக்கிய காரணம் அவர் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த நட்பின் அடிப்படையில் மறுக்காமல் இதற்கு சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமலுக்கு முன்பாகவே நாகார்ஜுனா முந்தி கொண்டார். இதனால் தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் இப்போது ஏகபோக குஷியில் இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த இரண்டு ஆன்ட்டி நடிகைகளும் நம்ம பிக்பாஸுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டனர். ஒருவேளை இந்த இரண்டு பேரும் தமிழ் பக்கம் வந்திருந்தால் விஜய் டிவியின் டிஆர்பி தாறுமாறாக எகிறி இருக்கும். இருப்பினும் இந்த சீசன் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கமல் நண்பராக இருந்தும் ரஜினிக்கு பிடிக்காத லிப்லாக் சீன்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பயில்வான்

Trending News