வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

68 வயதிலும் கமலை புரட்டி எடுக்கும் எச் வினோத்.. ஹாலிவுட்டை அடித்து நொறுக்க போகும் கூட்டணி

Kamalhassan in KH233: கமல்ஹாசனின், விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதை முடித்த கையோடு இவருடைய 233 வது படத்தை எச் வினோத்துடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் இப்படம் சமூக விஷயத்தை மையமாக வைத்து ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கப் போகிறது என்று செய்திகள் பரவியது.

அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் தாறுமாறாக இருந்தது. ஆனால் தற்போது ரொம்பவே ஆக்ரோஷமான கோபத்துடன் கமல் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுப்பது போல் வீடியோ வெளிவந்துள்ளது. இதுவரை எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த அளவுக்கு கமல் ஒரு பயிற்சி எடுக்கிற மாதிரி வீடியோக்கள் வந்ததே இல்லை.

Also read: கமல், ஏஆர் ரகுமான் மாதிரி காலை வாரி விட தயாரான பாலிவுட்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இயக்குனர்

இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படம் எந்த அளவிற்கு ஆக்சன் படமாக தெறிக்க விட்டது. அப்பொழுது கூட இப்படி ஒரு வீடியோ வந்ததில்லை. இதை பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாக இருக்கப் போகிறது. ஆனால் முதலில் சமூக விஷயத்தை வைத்து இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது ஆக்சன் படமாக மாறி இருக்கிறது.

அதற்கு காரணம் தற்போதைய ட்ரெண்டே ஆக்சன் கதை எடுப்பது தான். அதனால் இதையே பாலோ பண்ணலாம் என்று இயக்குனர் எச் வினோத் முயற்சி எடுத்து வருகிறார். இவர் யோசித்தது என்னமோ ஓகே தான், ஆனால் அதற்காக கமலை இந்த அளவுக்கு படாத பாடுபடுத்த வேண்டும்.

Also read: கமல் நண்பராக இருந்தும் ரஜினிக்கு பிடிக்காத லிப்லாக் சீன்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பயில்வான்

அதுவும் 68 வயது எட்டிய கமலை சக்கையாக பிழிந்து புரட்டி போட்டு எடுக்கிறார். அதற்கு காரணம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக கமலை வைத்து சத்தமே இல்லாத காரியத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ரசிகர்களுக்கு அடுத்து அதிரடியான விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் எச் வினோத் மற்றும் கமல் கூட்டணியில் “ஆட்சியை எழுச்சி” என்கிற கான்செப்ட் மையமாக வைத்து கோலிவுட்டை அதிரும்படியாக தரமான சம்பவம் செய்யப் போகிறார்கள். அதே நேரத்தில் கமலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

கமல் துப்பாக்கி சுடும் பயிற்சி புகைப்படம்

kamal-gun-shoot
kamal-gun-shoot

Also read: தனி ஒருவன் 2க்கு வில்லனாக பாலிவுட் ஜாம்பவான்.. சஞ்சய் தத், ஜாக்கி ஷெராப் வரிசையில் வரும் கமல் ஜெராக்ஸ்

Trending News