திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வழக்கம்போல வேலை காட்டிய அட்லி.. விஜய்க்கு பயத்தை காட்டியதால், சங்கு ஊதியாச்சாம்

Jawan – Atlee: நேற்று வரை இயக்குனர் அட்லியை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து வந்தவர்கள் எல்லாம், இன்று மொத்தமாக கழுவி ஊற்றும் அளவுக்கு சிறப்பான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அட்லி பாலிவுட்டிற்கு சென்றது நம்மில் ஒருவர் இந்தி படத்தை இயக்குகிறார் என அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தற்போது இவர் ஏன் பாலிவுட்டிற்கு போய் நாம் மானத்தை வாங்குகிறார் என பேச ஆரம்பித்து விட்டனர்.

அட்லி மட்டுமில்லாமல் ஷாருக்கான், நயன்தாரா என பலரின் 4 வருட கனவாக இருந்தது தான் ஜவான் படம். இந்த படத்திற்கு அதற்கு ஏற்றது போல் எக்கச்சக்க பில்டப் கொடுக்கப்பட்டது. பல வருட காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. அட்லியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

Also Read:அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.? மீண்டும் பாம்பே பாவு பஜ்ஜியா இல்ல சென்னை வடை தானா

அட்லி இதுவரை எடுத்த தமிழ் படங்கள் எல்லாம் பழைய படங்களின் காப்பி என அவர் மீது எப்போதுமே ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்படும். சமீபத்தில் இந்த நெகட்டிவ் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் பா ரஞ்சித் முதல், லோகேஷ் கனகராஜ் வரை பற்றி பேசி பயங்கரமாக ஒரு உருட்டு உருட்டினார். அப்போது கூட ஏன் இவர் இந்த நேரத்தில் இதைப் பற்றி பேசுகிறார் என தோணவில்லை.

நேற்று ஜவான் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தெரிகிறது அடுத்து நான் அதே வேலையை தான் செய்ய இருக்கிறேன் என்பதை மறைமுகமாக அட்லி சொல்லி இருக்கிறார் என்று. படம் ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்திலேயே இது எந்தெந்த படங்களின் காப்பி என நெட்டிசன்கள் வலை வீசி தேடி வழக்கம் போல அட்லியை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read:மொத்த வித்தையையும் இறக்கிய ஷாருக்கான்.. ஜெயித்தாரா அட்லி.? ஜவான் ட்விட்டர் விமர்சனம்

பாலிவுட் என்பதால் சிக்க மாட்டோம் என நினைத்த அட்லி, சில வருடங்களாக தமிழ்நாடு பக்கம் வராததால், நெட்டிசன்களின் திறமையை மறந்து விட்டார் போல. இப்போது மொத்தமாக அலசி ஆராய்ந்து இதுவும் காப்பி தான் என ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். படம் இந்தியில் வெற்றி பெற்று விடும் என்றாலும், தமிழில் மிகப் பெரிய வாய்ப்பை இழந்துவிட்டார் இவர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு பேச்சுவார்த்தையில் இதுவரை இருந்து வந்தது. ஜவான் பட விமர்சனத்திற்கு பிறகு இனி தளபதி கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை. வழக்கம்போல வேலையை காட்டி அண்ணனின் நம்பிக்கையை மொத்தமாக இழந்து விட்டார்.

Also Read:Jawan Movie Review- 4 வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

Trending News