ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நகைச்சுவையில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர் எஸ் சிவாஜி.. கமல் கூட்டணியில் வெளுத்து வாங்கிய 6 படங்கள்

RS Shivaji-Kamal Haasan: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் ப்ரொடியூசர் ஆகவும் பணியாற்றி, பின் முதன்மை நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் ஆர் எஸ் சிவாஜி. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவர் ஜனகராஜை பார்த்து சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று பேசும் வசனம் மூலம் அதிகமாக பிரபலமானார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிய இவர் தன்னுடைய 66 வது வயதில் இன்று மரணம் அடைந்து இருக்கிறார். ஆர் எஸ் சிவாஜி, கமலுடன் இணைந்து நடித்த இந்த ஆறு படங்கள் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாது.

விக்ரம்: நடிகர் ஆர் எஸ் சிவாஜி கமல் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்ந்த படங்களில் தான் பெரும்பாலும் நடித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனுக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அடையாளத்தை கொடுத்த படம் விக்ரம். இந்த படத்தில் ஆர் எஸ் சிவாஜி ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றிருப்பார்.

Also Read:தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க.! குணச்சித்திர நடிகர் சிவாஜி அகால மரணம், காரணம் கேட்டு அதிர்ச்சியில் கமல்

அபூர்வ சகோதரர்கள்: கமலஹாசன் மற்றும் கிரேசி மோகன் கூட்டணியில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் ஆர் எஸ் சிவாஜி நடிகர் ஜனகராஜ் உடன் இணைந்து போலீஸ் ஆக நடித்திருப்பார். இதில் ஒவ்வொரு காமெடி காட்சியிலும் ஜனகராஜை பார்த்து இவர் சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று சொல்லும் வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.

மைக்கேல் மதன காமராஜன்: கமலஹாசன் நடிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் மைக்கேல் மதன காமராஜன். வழக்கம் போல கிரேசி மோகன் கூட்டணியில் இந்த படத்தின் வசனங்கள் பட்டையை கிளப்பி இருக்கும். இந்த படத்தில் நடிகர் ஆர் எஸ் சிவாஜி மைக்கேல் என்னும் கேரக்டரில் நடித்த கமலின் கூட்டாளியாக நடித்திருப்பார்.

குணா: இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதி இயக்கத்தில் கமல் வித்தியாசமாக நடித்த படம் தான் குணா. இந்த படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற விட்டாலும், கமலின் நடிப்புக்காக இன்று வரை தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர் எஸ் சிவாஜி கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read:ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு சென்ற தூது..போன் போட்டு கமலிடம் மம்முட்டி போட்ட போடு

பம்மல் கே சம்மந்தம்: மௌலி இயக்கத்தில் கமலஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் தான் பம்மல் கே சம்பந்தம். இந்த படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்கும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் ஆர் எஸ் சிவாஜி இதில் நடித்திருந்தார்.

அன்பே சிவம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் அன்பே சிவம். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியை கொடுக்காவிட்டாலும், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களாலும், பிரபலங்களாலும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஆர் எஸ் சிவாஜி நடித்திருப்பார்.

Also Read:லெவல் மாறியதால் உச்சாணி கொம்புக்குப் போகும் கமல்.. ராஜ்கமல் பிலிம்ஸ் உலக நாயகனுக்கு கொடுத்த அந்தஸ்து

Trending News