ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.
கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் அந்த போட்டியை முழுவதும் காண முடியவில்லை. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. எப்படியும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கனவில் மண் விழுந்தது.
260 ரன்கள் எடுத்த இந்திய அணியின் பேட்டிங் முடிந்தவுடன் மழை வந்ததால் அந்த போட்டி கைவிடப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி முதலில் மலமல என விக்கெடுகள் இழந்தாலும் இசான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். மிகவும் அனுபவிக்க வீரர் போல் விளையாடினார் இஷான் கிஷான். அவருக்கு தகுந்த ஒத்துழைப்புகொடுத்தார் ஹார்திக் பாண்டியா .
இந்த போட்டியில் இசான் கிசான் விக்கெட்டை எடுத்த ஹாரிஸ் ராவ் என்னும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர். இஷான் கிஷானை வெறுப்பேற்றும் வகையில் “வெளியே போ” என்று பெவிலிய நோக்கி கை காட்டினார். ஒரு இளம் வீரர் அதுவும் அனுபவம் இல்லாத வீரர் பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி விளையாடியது அவருக்கு பிடிக்கவில்லை.
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு விட்டார் என்ற ஆதங்கத்தினால் ஹாரிஸ் ராவ் பெரிதும் கோபப்பட்டு இசான் கிசானை வெறுப்பேற்றினார். இது இந்திய அணிக்கு வெறுப்பேற்றும் விதமாக அமைந்தது. இளம் வீரர்களை பாகிஸ்தான் அணி இப்படி அவமானப்படுத்துவது புதிதல்ல.
ஏற்கனவே சமூக வலைதளக்கங்களில் ஹாரிஸ் ராவ் இப்படி செய்ததற்கு கண்டனம் எழுந்த வண்ணம் இருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பையில் அவர் பந்தை விராட் கோலி வெளுத்து வாங்கினார். இது அவருக்கு ஞாபகம் இல்லையா என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் அவருக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.