செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

ஜெயித்தால் ஒரு பேச்சு, தோத்த ஒரு பேச்சு.. பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்காமல் வாய்விட்டு சீரழியும் சோயப் அக்தர்

எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டை அதிவிரைவாக எடுத்த பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணி பவுலிங் மட்டுமில்லை பேட்டிகளும், பாகிஸ்தானை விட மோசமாகத்தான் இருக்கிறது. இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு கூட பிட்னஸ்சும் இல்லை, பொறுப்பும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னால் வீரர்கள் எல்லோரும் ஏளனம் செய்தார்கள்.

ஆனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் வாய் அடைக்கும் விதமாக இஷான் கிஷான் மற்றும் ஹார்லிக் பாண்டியா இருவரும் நங்கூரம் போல் நின்று இந்திய அணியை கரை சேர்த்தனர். இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அதனால் ஹாரிஸ் ராப்,இசான் கிசானின் விக்கெட்டை எடுத்து வெளியே போ என்று எரிச்சல் அடைய செய்தார்.

இது ஒரு புறம் இருக்க சோயப் அக்தர் இந்திய அணி பேட்டிங்கை விட பவுலிங்கில் மிகவும் மோசமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாட தான் லாயக்கு என்று ஏற்கனவே வசை பாடினார். இப்படி சொன்னவர் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பௌலங்கை பார்த்து, பாகிஸ்தான் கத்துக்க வேண்டும் என்று அப்படியே பல்டி அடித்து பேசியுள்ளார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி இடம் பாகிஸ்தான் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் அப்படியே இந்திய அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணி என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டார் அக்தர். அதேபோல் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் பந்துவீச்சில் இந்திய அணி தினரடித்து விட்டது.

இதை மலுப்பும் விதமாக சோயப் ஆக்டர் உலகத்தில் தலைசிறந்த மற்றும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இப்படி கூட வீசவில்லை என்றால் அவர் எல்லாம் என்ன பவுலர் என்று அப்படியே வஞ்சக புகழ்ச்சி போல் பேசியுள்ளார். இவரெல்லாம் ஒரு பெரிய மனுசனா, தோத்தா ஒரு பேச்சு, ஜெயிச்ச ஒரு பேச்சு பேசுவதான்னு அக்தரை வசைப்பாடி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News