குணசேகரனை விட குடைச்சல் கொடுக்கும் கரிகாலன்.. இனி மாரிமுத்துவை பார்க்க முடியாத கடைசி எபிசோடு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி குணசேகரனை கொஞ்சம் கொஞ்சமாக தோற்கடித்து அந்த வீட்டில் இருக்கும் மருமகள்கள் ஜெயிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பிள்ளையார் சுழியாக அனைவரும் முதல் மாச சம்பளத்தை பெற்று தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறார்கள்.

அந்த வகையில் குணசேகரனின் அம்மாவும் மறைமுகமாக மருமகளுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டார். இதற்கு இடையில் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் ஏதோ தில்லுமுல்லு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று கரிகாலன் அவ்வப்போது குணசேகரிடம் ஓதிக் கொண்டு வருகிறார்.

அத்துடன் ஒவ்வொருவரும் செய்யும் வேலையை மோப்பம் பிடித்து அதை குணசேகரனிடம் போட்டும் கொடுத்து வருகிறார். இதற்கு குணசேகரனே பரவாயில்லை என்பதற்கு ஏற்ப கரிகாலன் ஓவர் அலப்பறையை கூட்டி வருகிறார். ஆனாலும் குணசேகரன் கண்ணில்லையே மண்ணைத் தூவிக்கொண்டு காய் நகர்த்தும் போது கரிகாலன் எல்லாம் பெரிய விஷயமே கிடையாது.

இதனை தொடர்ந்து ஜனனியும் சக்தியும் சேர்ந்து அவர்களுக்கான பிசினஸ் ஆரம்பித்து ஆதி குணசேகரனுக்கு எதிராக தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கப் போகிறார்கள். ஏற்கனவே தோற்றுப் போய் இருக்கும் குணசேகரனுக்கு அடிக்கு மேல் அடியாக இனி ஒவ்வொரு விஷயங்களும் நடக்கப் போகிறது.

ஏற்கனவே சொத்துப்போன சோகம், இதுல வேற அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் சுயமாக சம்பாதித்து முன்னேறி விட்டார்கள் என்று தெரிந்தால் மொத்தமாக உடைந்து போய்விடுவார். ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் தன்னுடைய கொள்கையை விட்டு விடக்கூடாது என்ற பிடிவாதம் மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த நாடகத்துக்கு இதுவரை ஆணிவேராக இருந்தது குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து. இந்த நாடகத்தில் நடித்த பிறகுதான் இவருடைய கேரியரை விருட்சமாச்சு. அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லாதது அனைவருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது. அத்துடன் குணசேகரன் கடைசியாக நடித்த எபிசோடு காட்சிகளும் இதுதான். இனி மாரிமுத்துவை பார்க்க முடியாது என்று நினைக்கும் போது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →