ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சன் பிக்சர்ஸ் மாறனின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு.. மொத்த சொத்தையும் ஆளப்போகும் அதிர்ஷ்டசாலி மருமகன்

Sun Pictures Maran Asset Value: உலகின் பில்லியனர்கள் பட்டியலில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் முக்கிய இடம் பெற்றுள்ளார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது புள்ளி விவரத்துடன் வெளியாகி பலரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

இவர் அரசியல்வாதியான முரசொலி மாறனின் மகனும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் வழி பேரன். மேலும் கலாநிதி மாறன் தற்போது உலக அளவில் திரும்பிப் பார்க்கக் கூடிய  அசைக்க முடியாத கோடீஸ்வரனாக மாறி உள்ளார்.

Also Read: ஜவான் வெற்றியால் தமிழுக்கு முழுக்கு போடும் அட்லீ.. காப்பினாலும் நரசுஸ் காப்பிதான் வேணுமாம்

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, கலாநிதி மாறனின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு $3 பில்லியன் அல்லது தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 3000 கோடிகள் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவர் உலகின் பில்லியனர்கள் பட்டியலில் 1337-வது இடத்திலும், இந்தியாவில் 77-வது இடத்திலும் உள்ளார்.

இந்தியாவில் 95 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடையும் 33 சேனல்களைக் கொண்ட பிரபல தொலைக்காட்சி நெட்வொர்க்கான சன் டிவி நெட்வொர்க்கின் நிறுவனராக கலாநிதி மாறன் இருக்கிறார். அவர் 2010 முதல் 2015 வரை இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருந்தார்.

Also Read: ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

மாறனின் மற்ற ஆர்வங்களில் செய்தித்தாள்கள், வானொலி மற்றும் நேரடியாக வீட்டிற்குச் செல்லும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதிலிருந்து மட்டும் வருடத்திற்கு பல கோடிகள் வருமானமாக பெறுகிறார். இதனால் சமீப காலமாக வெளியாகும் டாப் நடிகர்களின் படங்களை போட்டி போட்டுக் கொண்டு சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது.

கலாநிதி மாறன் தன்னுடைய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தற்போது மட்டும் 1250 கோடிகளைக் கொட்டி 5 பெரிய பட்ஜெட் படங்களை தயார் செய்துகிறார். இவருக்கு காவியா மாறன் என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். இந்த மூவாயிரம் கோடி சொத்துக்கும் அவர் ஒருவர் தான் வாரிசு. இவருக்கு மருமகனாக வரும் அந்த அதிர்ஷ்டசாலி தான் இந்த மொத்த சொத்தையும் ஆளப்போகிறார். மேலும் காவியா மாறன் இப்போது அனிருத்துடன் நெருங்கி பழகி வருவதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் 3000 கோடி சொத்துக்கு அதிபதியாக அனிருத் மாற வாய்ப்பிருக்கிறது.

Also Read: 1250 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் கல்லா கட்ட போகும் சன் பிக்சர்ஸ்.. எதிர்பார்ப்பை எகிற விட்டு தயாராகும் 5 படங்கள்

Trending News