Six Actors: சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் முந்தி மோதிக் கொண்டு போராடி வருவார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் மட்டுமே வெற்றியை பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் சில நடிகர்கள் எக்கச்சக்கமான படங்கள் நடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள். அதில் சில நடிகர்கள் நடித்த நூறாவது படம் அவர்களுக்கு கை கொடுக்காமல் தோல்வியை கொடுத்திருக்கிறது. அந்த நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஜெமினி கணேசன்: ஜெமினி கணேசன் என்ற பெயர் சொன்னாலே காதல் மன்னன், லீலைகளுக்கு சொந்தக்காரர் என்று இவர் மீது முத்திரையை பதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் நடித்த நூறாவது படமான “சீதா” இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருப்பார்.
Also read: சாம்பார் என்ற பட்டத்தை வாங்கிய ஜெமினி கணேசன்.. பலரும் அறியாத காதல் மன்னனின் லீலைகள்
ஜெய்சங்கர்: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்தாலும் சில நடிகர்கள் தான் நம்முடைய ஞாபகத்தில் இருப்பார்கள். அந்த வகையில் ஜெய்சங்கரின் நடிப்பை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திட முடியாது. அப்படிப்பட்ட இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என்று பல கேரக்டர்களை நடித்து வந்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த நூறாவது படமான இதயம் பறக்கிறது என்ற படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்திருக்கிறது.
ரஜினிகாந்த்: தன்னுடைய 72 வயதிலும் கிட்டத்தட்ட ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். எந்த அளவிற்கு சினிமாவில் ஆர்வம் காட்டுகிறாரோ அதே அளவிற்கு கடவுள் பக்தியும் அதிகம் உண்டு. முக்கியமாக ராகவேந்திரா என்றால் இவருக்கு விருப்பமான கடவுள் என்றே சொல்லலாம். அதனாலேயே இவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் அச்சு அசல் கடவுளாகவே நடித்து இருப்பார். ஆனால் இந்த படம் இவருடைய மற்ற படங்கள் போல வெற்றியை கொடுக்கவில்லை.
Also read: பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா
கமலஹாசன்: கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட படங்களின் நடித்து உலக நாயகனாக பெயரும் புகழையும் சம்பாதித்து கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய நூறாவது படமான ராஜபார்வை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. முக்கியமாக இந்த மாதிரி ஒரு படம் இவருக்கு செட்டே ஆகலை என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கியது. அதுவும் இந்த படத்தில் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் நிலைமை ஆகிவிட்டது.
பிரபு: இவருடைய அப்பா சிவாஜி மூலமாக சினிமாத்துறைக்கு அடி எடுத்து வந்திருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் பல படங்கள் வெற்றியாக கொடுத்தார். இவர் நடித்த முக்கால்வாசி படம் 100 நாட்களையும் கடந்து அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் நடித்த நூறாவது படமான ராஜகுமாரன் இவருக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது.
சரத்குமார்: இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் இவருக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முக்கியமாக குடும்ப படங்களில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். அப்படிப்பட்ட இவர் நடித்த நூறாவது படமான தலைமகன் படு தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
Also read: சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்