திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இயக்குனரை சுத்தலில் விடும் தனுஷ்.. மொத்தமாக ஆப்பு வைத்த திரையுலகம்

Actor Dhanush: தனுஷ் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் தனுஷுக்கு ரெட் கார்டு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் பல இயக்குனர்களிடம் கால்ஷீட் கொடுத்துவிட்டு சாக்கு போக்கு சொல்லி வருகிறாராம். இதனால் தான் சில வருடம் தனுஷ் நடிக்க முடியாமல் தடை விதிக்க உள்ளனர்.

அந்த வகையில் தனுஷால் பல நாட்களாக ஒரு இயக்குனர் காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது இப்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதற்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50ஆவது படத்தில் நடிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தனுஷ் இயக்கவும் செய்கிறார்.

Also Read : சிம்பு கைவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. பெண் பித்து பிடித்து ஆட்டிய கெட்ட நேரத்தில் தட்டி தூக்கிய தனுஷ்

இந்த சூழலில் பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் தனுஷுக்கு கதை சொல்லி ஓய்ந்து விட்டனராம். இதில் சில இயக்குனர்களிடம் பிறகு படம் பண்ணலாம் சிறிது காலம் காத்திருங்கள் என்று சாக்குபோக்கு சொல்லி இருக்கிறார். அதில் குறிப்பாக விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த ராம்குமாரும் இருக்கிறார்.

இவர் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக தனுஷுக்கு கதை சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்காக தயாரிப்பாளரிடம் குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையைப் பெற்றுவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் தனுஷ் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read : மோசமான மன நிலையில் தனுஷ்.. காசு, பணம் இருந்தும் சூட்டிங் ஸ்பாட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

இதனால் ராம்குமார் தனுஷ் படத்தை இயக்கி விட்டு தான் மற்ற படத்திற்கு செல்ல வேண்டும் என்று காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் மட்டும் நடித்துவிட்டு சில இயக்குனர்களை டீலில் விட்டு வருகிறார். இதற்கெல்லாம் காரணம் எல்லா பக்கமும் கால்ஷீட் கொடுத்து மாட்டி கொண்டது தான்.

மேலும் இயக்குனர் ராம்குமார் போல பல இயக்குனர்கள் தனுஷுக்கு பழி கெடாக மாறி இருக்கிறார்கள். இப்போது அவர்களின் வயிற்றெரிச்சல் தான் தனுஷ் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு தனுஷை மட்டும் குறை சொல்லி விட முடியாது என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஏனென்றால் உச்ச நட்சத்திரமாக தனுஷ் இருப்பதால் அவர் படத்தை இயக்க வேண்டும் என்று நச்சரிப்பதால் அவர் வேறு வழியின்றி சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read : சிவகார்த்திகேயன், தனுஷ் ஹிட் லிஸ்டில் சேர்ந்த சூரி.. கருடனாக புதிய அவதாரம் ஜெயிக்குமா?

Trending News