Actor Simbu: சிம்புவையும், சர்ச்சையையும் பிரித்து வைக்க முடியாது என்ற அளவுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை அவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. சிறுவயதிலேயே சினிமாவுக்குள் வந்து விட்டாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் தற்போது வரை அவர் இடம் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.
ஆனால் மாநாடு படத்தில் இருந்து தான் சிம்பு மீது வெளிச்சம் பட ஆரம்பித்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிம்பு மீது ரெட் கார்டு தடை போட உள்ளதாக தகவல் வெளியானது. அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தனர்.
அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்புவை ஒப்பந்தம் செய்திருந்தது வேல்ஸ் நிறுவனம். மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் 9.5 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் 4.5 கோடி முன்பனமாக சிம்பு பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.
இதில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா குமார் படத்திற்கு சிம்பு சரியான தேதி ஒதுக்கவில்லை என வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொரோனா குமாருக்கு வாங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் என முறையிடப்பட்டது.
Also read: ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு
மேலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கொரோனா குமார் படத்திற்காக வேல்ஸ் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை சிம்பு திருப்பி கொடுக்க தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஏனென்றால் சிம்பு நடிக்க தயாராக இருந்தும் அந்த வருடத்திற்குள் படத்தை எடுக்காமல் இருந்தது தயாரிப்பு நிறுவனத்தின் மீதுதான் குற்றம்.
இதனால் சிம்பு எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளனர். ஆகையால் சிம்பு இப்போது தனது அடுத்த அடுத்த படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார். அந்த வகையில் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில்
நடிக்கவிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
Also read: கமல் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு?. வாரிசு நடிகரை லாக் செய்த உலகநாயகன்