வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தன் பொண்டாட்டியின் கேரியரை சோலி முடித்துவிட்ட விக்கி.. மீண்டும் தயாரிப்பாளர்களை சீண்டிய ஜோடி

Nayanthara – Vignesh Shivan: நடிகை நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் என்பது எட்டாத கனியாக போய்விட்டது. ஜவான் மற்றும் இறைவன் படங்களின் ரிலீசுக்கு பிறகு தான் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் ஏதாவது தேறும் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் மொத்தமாக அதில் மண்ணை அள்ளி போடும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்திருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய திருமணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பில் இருந்தே தொழில்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார். சாய் வாலே, லிப் பாம் போன்ற தொழில்களில் முதலீடு செய்த அவர், சமீபத்தில் டிவைன் ஃபுட்ஸ் தொழிலிலும் முதலீடு செய்தார். அதைத் தொடர்ந்து அழகு சாதன பொருட்கள் விற்கும் சொந்த நிறுவனத்தை 9 ஸ்கின் என்னும் பெயரில் தொடங்கி இருக்கிறார்.

Also Read:பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

இதன் தொடக்க விழா கடந்த 29ஆம் தேதி மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தொடக்க விழாவில் தான் பேசத் தெரியாமல் பேசி விக்னேஷ் சிவன் ஏழரை இழுத்து வைத்திருக்கிறார். எந்த வேலைக்கு போனோமோ அந்த வேலையை செய்யாமல் வழக்கமாக தன்னுடைய தங்கத்தை உயர்த்தி பேசுகிறேன் என்ற பெயரில் அவர் கேரியருக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்று பல வருடமாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதிலும் ஜவான் படத்திற்காக தன்னுடைய கொள்கையை தளர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்த நயன், இறைவன் படத்திற்கு அப்படி செய்யாமல் விட்டது ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.

Also Read:5 மடங்கு லேடி சூப்பர் ஸ்டாரை விட மேல் என காட்டிய சமந்தா.. இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட திரிஷா

இப்படி ஒரு சூழ்நிலையில் அந்த விழா மேடையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவை பொருத்தவரை ஒரு விஷயம் சரி என்று தெரிந்தால் தான் அதை ப்ரொமோட் செய்வார், மேலும் சிறந்த பொருட்களுக்கு பிரமோஷன் தேவையில்லை என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. அதனால் தான் தன்னுடைய சொந்த படங்களுக்கு கூட அவர் பிரமோஷன் விழாக்களுக்கு செல்வதில்லை என்று பேசி இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் சொல்லி இருப்பதை பார்த்தால் நயன்தாராவுக்கு அவர் நடிக்கும் படங்கள் நன்றாக இருக்காது என்று தெரிந்து கொண்டு அதனால் தான் பிரமோஷனுக்கு செல்வதில்லை என்பது போல் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இது போன்ற ஒரு கருத்தினால் தான் தயாரிப்பாளர்கள் சங்கம் அவர் மீது கொந்தளித்தது. அப்படி இருக்கும் பொழுது மீண்டும் இதையே பேசி வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.

Also Read:50 வினாடி விளம்பரத்திற்கு நயன்தாரா வாங்கும் பல கோடி சம்பளம்.. அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்

- Advertisement -

Trending News