திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தரமான சம்பவத்தால் 6 வீரர்கள் வாங்கிய அடைமொழி.. கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அறலவிட்ட சுல்தான் ஆஃப் முல்தான்!

கிரிக்கெட் வீரர்கள்,போட்டிகளில் சில தரமான சம்பவங்களை செய்து தங்கள் பெயருக்கு பின்னால் அடைமொழி பெயரோடு சுற்றி வருகின்றனர். மறக்க முடியாத சில இன்னிங்சால் அவர்களுக்கு அத்தகைய பெயர்களை பெருமைப்படுத்தும் அளவிற்கு வழங்கியுள்ளனர். உதாரணத்திற்கு “God of cricket” என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் அவரைப் போலவே பல வித்தைகளை காட்டி பெயர் வாங்கிய 6 கிரிக்கெட் வீரர்கள்.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்: இந்த பெயரை வாங்கியவர் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அத்தர். கிட்டத்தட்ட பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருந்து ஓடி வருபவர் இவர். அப்படி இவர் வீசக்கூடிய வேகம் பாகிஸ்தான் நாட்டில் செல்லக்கூடிய அதிவேக ரயில் வண்டி ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் மாதிரி இருக்கும் என்பதால் இவருக்கு அந்த பெயர் வந்தது.

தி வால்: சுவர் மீது பந்தை எறிந்தால் மீண்டும் மீண்டும் நம் பக்கம் தான் வரும். அதைப்போல் ராகுல் டிராவிட் பேட்டிங் செய்யும்போது வீசக்கூடிய பந்துகளை எல்லாம் டொக்கு போட்டு விடுவார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பவுலர்கள் நொந்து விடுவார்கள். இதனாலேயே இவருக்கு இந்த பெயரை சூட்டி விட்டனர்.

டான்: இது கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட் மேனுக்கு சூட்டப்பட்ட செல்லப் பெயர். இவரது சராசரி டெஸ்ட் போட்டிகளில் 99.99, இதை அடிச்சுக்க இன்றுவரை ஆள் இல்லை.

லாகூர் லயன்: இது ஆக்ரோஷமான கேப்டன் இம்ரான் கானின் செல்ல பெயர். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான அணி உலக கோப்பையை வென்றது. இம்ரான் கான் ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர். பந்துவீச்சில் லாகூரில் பல சாதனைகளை நிகழ்த்தி அசத்தி இருக்கிறார்.

சுல்தான் ஆஃப் முல்தான்: ஒரு இந்திய வீரர் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் முதன்முதலாக அடித்தார் என்றால் அது விரேந்திர சேவாக் தான். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் இவர் அடித்தது 309 ரன்கள், தான் இன்று வரை ஒரு இந்தியரின் தனிப்பட்ட அதிக ரன்கள். இதனால் அவருக்கு‘சுல்தான் ஆஃப் முல்தான்” என பெயர் வந்தது.

மேஜிசியன்: பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சையத் அஜ்மல். இவர் பந்து எப்படி வரும், எந்த பக்கம் சுழன்று வரும் என்பதை எளிதில் கணிக்க முடியாது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மொயின் கான் இவர் பந்தை பிடிக்க மிகவும் சிரமப்படுவார்.அதனாலேயே இவருக்கு “மேஜிசியன்” என்ற பெயர் வந்தது

Trending News