வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஆரம்பமே பழி தீர்க்க திட்டம் போடும் நியூஸிலாந்து.. ஒரே வீரர் மீது கொழுந்துவிட்டு எரியும் மொத்த பகை

இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு. 50 ஓவர்கள் நின்று முதலில் ஆடும் அணி ஒருவகையான அழுத்தத்தில் இருக்கும் .அதேபோல் இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி வகுக்கும் திட்டங்கள் தந்திரமாக இருக்கும். இதுதான் ஒரு நாள் போட்டியின் சிறப்பம்சம்.

இதற்கு முன்னர் 2019 ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இங்கிலாந்து அணி. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற்ற அந்த போட்டியில் கடைசி நேரத்தில் நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்றது. முதலில் அந்த போட்டி இரு அணிகளும் சமமான ரன்களை பெற்று போட்டி டிராவில் தான் முடிந்தது.

அந்த உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து ,இந்தியா, ஆஸ்திரேலியா இந்த நான்கு அணிகளும் தகுதி பெற்றது. அரை இறுதியில் இந்தியாவை – நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவை – இங்கிலாந்தும் வீழ்த்தி இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 241 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது. அதன் பின்னர் சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து 15 ரன்கள் அடித்தது. இங்கிலாந்தும் அதே 15 நாட்களை அடித்து நடுவர்களை இக்கட்டான முடிவை எடுக்க வைத்தது.

அதாவது இந்த போட்டியில் எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்தது என்பதை வைத்து முடிவை அறிவித்தனர். அதில் இங்கிலாந்து 22 பவுண்டரிகளை அடித்திருந்தது மாறாக நியூசிலாந்து வெறும் 14 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தது. இதனால் இந்த விதியின்படி இங்கிலாந்து வெற்றி பெற்றது என அறிவித்தனர்.

இந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எமனாக இருந்த ஒரே வீரர் பென் ஸ்ரோக்ஸ். இவர்தான் இரு போட்டியையும் மாற்றியுள்ளார். அதாவது ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 84 ரன்கள் அடித்து இங்கிலாந்தை கரை சேர்த்தார் ஸ்ரோக்ஸ். அதேபோல் சூப்பர் ஓவர் போட்டியிலும் தேவைப்படும் 15 ரண்களில் எட்டு ரன்கள் அடித்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். அதனால் அவரை பழிதீர்க்கும் விதமாக நிச்சயமாக நியூசிலாந்து அவருக்கு கட்டம் கட்டி வருகிறது.

- Advertisement -

Trending News