Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை குணசேகரனுக்கு பயந்து போய் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் அடிமைத்தனமாக வாழ்ந்து வந்தார்கள். அப்பொழுது ஜனனி வந்ததும் இவருடைய வாழ்க்கையும் பேச்சும் அப்படியே மாறிவிட்டது. குணசேகரன் மற்றும் கணவன்மார்களை துணிந்து கேள்வி கேட்கும் தைரியசாலியாக மாறி ஜெய்ப்பதற்கு ஒரு படி முன்னேறி வந்தார்கள்.
ஆனால் தற்போது பழைய குருடி கதவைத் திறடி என்பதற்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரனின் அராஜகத்தால் மறுபடியும் பயந்து போய் இருக்கிறார்கள். அடுத்ததாக குணசேகரன் ஜெயிலுக்கு போகும்போது தம்பிகளை கொம்பு சீவிக் கொண்டு எல்லாத்தையும் தட்டிக் கேட்க வேண்டும் என்று அடாவடித்தனத்தின் பொறுப்பை ஒப்படைத்தட்டு போயிருக்கிறார்.
அந்த வகையில் கதிர் மற்றும் ஞானம் ரொம்பவே ஓவராக அட்டூழியம் செய்கிறார்கள். அத்துடன் அண்ணனைத் தேடி நாலா பக்கமும் அலைந்து திரிந்து வருகிறார்கள். அப்பொழுது ஆடிட்டர் இவர்களிடம் உங்க அண்ணன் உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு போயிருக்கிறார். அத்துடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தையும் சொல்லிட்டு போயிருக்கிறார்.
அதை எல்லாம் நீங்கள் சரியாக செய்து முடிங்கள். உங்க அண்ணன் தானாக வீட்டுக்கு வந்து விடுவார் அதற்கு நான் பொறுப்பு என்று கதிர் மற்றும் ஞானத்திடம் கூறுகிறார். உடனே அவர்களும் புலம்பிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பி வருகிறார்கள். வரும்போதே கதிர் வில்லத்தனத்தின் மொத்த உருவமாக அண்ணன் சொன்னபாடி காரியத்தை கச்சிதமாக முடித்து விட வேண்டும் என்று ஆவேசமாக பொங்குகிறார்.
அப்பொழுது கரிகாலன், அப்பத்தா கதையை முடிக்கப் போறீங்களா என்று கேட்கிறார். அந்த வகையில் 40% சொத்துக்காக அப்பத்தாவிடம் பிரச்சனை செய்யப் போகிறார். இதில் யார் குறுக்க வந்தாலும் அவர்களுக்கு சங்கு தான் என்ற முடிவுடன் கதிர் வேட்டைக்கு தயாராகி விட்டார். அடுத்தபடியாக ஜனனி அப்பா நாச்சியப்பன் சம்மந்தி வீட்டிற்கு வந்து அவருடைய இரண்டாவது மகள் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்.
அப்பொழுது வழக்கம்போல் குணசேகரின் அம்மா வார்த்தைகளால் தாக்குகிறார். உடனே ஜனனி அப்பா நீ வாழ்க்கையில் ரொம்ப தோற்றுப் போயிட்ட. உன்னால் ஜெயிக்க முடியாது என்று சொல்கிறார். அதற்கு ஜனனி கண்டிப்பாக நான் வாழ்க்கையில் ஜெயித்து காட்டுவேன். அதற்குப் பக்கபலமாக என்னுடன் இருந்து என்னை கை தூக்கி விடப் போவது என்னுடைய சக்தி தான் என்று சவால் விடுகிறார். அதனால் ஒட்டுமொத்த அனைவருக்கும் சக்தியை வைத்து ஜனனி பதிலடி கொடுக்க போகிறார்.