திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விராட் கோலியால் பற்றி எரியும் பாகிஸ்தான்.. மாமா மச்சான் உறவால் வயிறு எரியும் வாசிம் அக்ரம்

தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது. மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் உச்சகட்ட கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே பற்றி எரிகின்ற பாகிஸ்தான் நாட்டில் எரிகிற கொல்லியில் எண்ணெயை ஊற்றியது போல் அந்த அணியின் பயிற்சியாளர், இந்தியாவில் எங்களுக்கு சப்போர்ட் இல்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிவிட்டார். இதை கேட்ட வாசிம் அக்ரம் உங்களுக்கு அணியை வலுவான அணியாக மாற்ற வக்கில்லை என்றால் இந்த மாதிரி கூறக்கூடாது என கடுமையாக கண்டித்து வருகிறார்.

Also Read: கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ,பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் எரிச்சல் அடைய செய்துள்ளது. போட்டியை தான் வெல்லவில்லை அவர்களிடம் எதிர்த்து போராடும் ஒரு தன்னம்பிக்கையும், துணிச்சலும் கூட இல்லை என்று பல முன்னால் வீரர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எந்த ஒரு இடமும் கொடுக்காமல் எளிதாக வெற்றி பெற்றது. இத்தகைய படுதோல்வியை பாகிஸ்தான் நாட்டினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் இருநாட்டு வீரர்களும், போட்டியில் மிகவும் நட்பு பாராட்டியது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்த செயலை அந்த நாடு வன்மையாக கண்டித்து உள்ளது.

என்னதான் உங்களுக்குள் நல்ல உறவு இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதம் வேறு. மொத்த ரசிகர்களும் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருக்கும் போது நீங்கள் மைதானத்திலேயே மாமன் மச்சான் உறவு கொண்டாடுவது போல் நடந்து கொள்வது மிகவும் தவறு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்

Also Read: உலகக் கோப்பை இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்.. இளம் வீரர்களை ஒதுக்கிய அஜித் அகார்கர்

விராட் கோலியின் இரண்டு ஜெர்சிகளை வாங்கிய பாபர் அசாம் அதில் அவரது கையெழுத்து பொறித்து தருமாறு மைதானத்திலேயே கேட்டுக்கொண்டது தான் இப்பொழுது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உங்களுக்கு உண்டான நட்பை மைதானத்திற்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

Trending News