தனது 5 ஹிட் படங்களின் ரீமேக் ஹீரோக்களை லிஸ்ட் போட்ட சுரேஷ் கிருஷ்ணா.. சத்யாவுக்கு பொருத்தமான ஹீரோ இவர்தான்

5 Movies Remake Heroes: 80, 90களில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. 1988 ஆம் ஆண்டு இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்தார். அப்படி இவர் இயக்குனராக அறிமுகமான முதல் படமே சத்தியா. இந்த படத்தில் கமல் நேர்மையான வழியில் ஜெயிக்க வேண்டும் என்று போராட துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

இதனைத் தொடர்ந்து பாட்ஷா, அண்ணாமலை, பாபா, ஆளவந்தான், வீரா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட இவரிடம் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் இவர் இயக்கிய படங்களை ரீமேக் பண்ணினால் எந்த ஹீரோவை வைத்து எடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சரியான பதிலை கொடுத்து இவருடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில் இவரிடம் ஆளவந்தான் படத்தைக் காட்டி இந்த கேரக்டருக்கு எந்த ஹீரோ நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்ப உள்ள ஹீரோக்களில் தன்னுடைய உருவத்தையும் தோற்றத்தையும் கதைக்கு ஏற்ற மாதிரி மாத்திக் கொண்டு நடிக்கக்கூடிய ஒருவர் விக்ரம் தான். அந்த வகையில் ஆளவந்தான் கெட்டப்புக்கு ஏற்ற ஒரு நடிகர் விக்ரம் என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்தபடியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த வீரா படத்தை காட்டி இந்த கேரக்டருக்கு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்கள். அதற்கு இந்த படத்தை பொறுத்த வரை இரண்டு விதமான கேரக்டர் வேண்டும் ஒன்னு கிராமத்தில் இருக்கும் பொழுது பெண்களை பார்த்து ஜொள்ளு விடும் கேரக்டர் இன்னொன்று குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று போராடும் கேரக்டர். இது இரண்டுக்குமே பொருத்தமான நடிகர் கார்த்தி என்று கூறியிருக்கிறார்.

இதற்கு அடுத்து சத்யா படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி ஏற்கனவே சூர்யா நந்தா படத்தில் அந்த கெட்டப்பை போட்டிருப்பார். அதனால் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அடுத்ததாக பாபா படத்தை ரீமேக் பண்ணினால் எந்த ஹீரோவை நடிக்க வைப்பீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தனுஷ் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் கூறினார்.

அடுத்தபடியாக அண்ணாமலை படத்தில் எந்த ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்ட கேள்விக்கு விஜய் நடித்தால் இதற்கு ரொம்பவே சூட்டாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதே மாதிரி பாட்ஷா படத்தை ரீமேக் பண்ணினால் யார் நடிக்க வைப்பீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு இதற்குப் பொருத்தமான நடிப்பை கொடுப்பதில் கச்சிதமாக இருக்கக்கூடியவர் அஜித் தான் என்று சொல்லி இருக்கிறார். இப்படி இவர் இயக்கிய படங்களில் ரீமேக் பண்ணினால் இந்த நடிகர்களை நடிக்க வைப்பேன் என்று இவருடைய ஆசையாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →