D Imman-Sivakarthikeyan: ஒரே ஒரு பேட்டியை கொடுத்து சிவகார்த்திகேயனின் சோலியை முடித்துவிட்டு இருக்கிறார் டி இமான். ஏற்கனவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு என சலசலக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள் நிச்சயம் யாரும் எதிர்பார்க்காததாக தான் உள்ளது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாக இமான் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஆனால் அது என்ன என்று தெரியாத நிலையில் சினிமா விமர்சகர்கள் வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் மறைமுகமாக ட்வீட் போட்டு ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
அதாவது சிவகார்த்திகேயனுக்கு இமான் மனைவியுடன் தவறான உறவு இருந்ததாக ஒரு தகவல் இப்போது படு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் இது பற்றி கிசுகிசுவாகவே வெளிவந்திருந்தது. வித்தகன் என்பவர் இதைப்பற்றி கூறியிருந்த நிலையில் அந்த வீடியோவும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பலரும் அப்ப இதெல்லாம் உண்மைதானா என்று நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பிஸ்மி தன் சோசியல் மீடியா பக்கத்தில் உடன் பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதை விட கேடு கெட்ட செயல் வேறு எதுவும் இல்லை என்று மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளார்.
அதேபோன்று அந்தணன் டி இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா. இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா வலைப்பேச்சு சொல்லி இருக்கு. இன்று அதையே தன் வாயால் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் ட்வீட் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் மூலம் சிவகார்த்திகேயன் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் யோசிக்க வைத்துள்ளது. இப்படி புற்றீசல் போல சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவருடைய முகத்திரையையும் கிழித்துள்ளதாக சிலர் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதன் உண்மை தன்மை என்ன என்பதை அவர் தான் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.