Rajini Movie Actress: சினிமாவில் உள்ள சின்ன சின்ன ஆர்ட்டிஸ்ட்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை ரொம்பவே பாதிப்படைகிறது. இந்த ஒரு விஷயம் சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை சமூக வலைதளங்களில் அவர்கள் வீடியோ மூலம் பதிவிட்டு விடுகிறார்கள். அதனால் அவர்கள் பண நெருக்கடியிலும், சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் அவஸ்தப்படுவதையும் பார்க்க முடிகிறது.
இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் பிரச்சனை வந்துவிடுகிறது. இதனால் யாராவது எங்களுக்கு உதவி பண்ணுங்க என்று அவர்களுடைய துக்கத்தை வீடியோ மூலம் பெரிய பெரிய நடிகர்களுக்கும், சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் அனுப்பி விடுகிறார்கள். அப்படித்தான் ரஜினி படத்தில் நடித்த நடிகைக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜானி படத்தின் மூலம் இந்த நடிகை மிகவும் பிரபலமானார். இதில் ஆசைய காத்துல தூது விட்டு பாடலுக்கு ஆடிய நடிகை சுபாஷினி தான். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கடைசியாக பாய்ஸ், கத்தி தாவுது மனசு மற்றும் பக்கா போன்ற படங்களில் நடித்தார்.
அப்படிப்பட்ட நடிகை தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தையில் இருக்கிறார். இவர் இதுவரை சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் இவருடைய சொந்தக்காரர்கள் ஏமாற்றி விட்டனர். இதனால் தற்போது இவருடைய ட்ரீட்மென்ட் கூட பணம் இல்லாமல் ரொம்பவே கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கிறார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரிடமும் உதவி கேட்டு வருகிறார். ஆனாலும் தற்போது வரை யாரும் எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார்கள். இப்படியே போனால் இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த பயத்தினால் கடைசியாக ரஜினி மற்றும் கமலிடம் உதவி கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஒரு விஷயம் தற்போது தொடர்ந்து சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் வாய்ப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வேற வேலையும் பார்க்க முடியாமல் அப்படியே முடங்கி போய் விடுகிறார்கள். இதனால் கடைசி காலத்தில் பணம் இல்லாமல் உதவி கேட்டு தவித்து வருகிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்கு கூடிய விரைவில் நடிகர் சங்கத்திலிருந்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு தீர்வு காண வேண்டும்.