Sun Tv New Serial: சன் டிவி சீரியலுக்கு போட்டியாக எத்தனையோ சேனல்களில் சீரியல்கள் வந்தாலும், எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் டிவி தான். அந்த வகையில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பகலில் 6 சீரியல், சாயங்காலம் 6 என பிரித்து போடப்பட்டு வருகிறது. ஆனாலும் எப்போதுமே சாயங்காலம் வருகிற சீரியலுக்கு மட்டும் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.
அந்த வகையில் நல்ல போகிற சீரியல் என்றால் அதை சாயங்காலம் போட்டுவிட்டு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துக் கொள்வார்கள். அதில் கயல், ஆனந்த ராகம், சுந்தரி மற்றும் எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் தான் சமீப காலமாகவே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் இருந்து சிம்ம சொப்பனமாக ஜொலித்தது.
ஆனால் எப்பொழுது குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் போனதோ அப்போதே இந்த நாடகம் டம்மி ஆகிவிட்டது. எப்படியாவது மறுபடியும் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பல வகையில் போராடி வருகிறார்கள். ஆனாலும் இதற்கு எதிரான கருத்துகள் தான் அதிகரித்தே வருகிறது. அதனால் இந்த சீரியலை மட்டும் நம்பி இருந்தால் போதாது என்று புதிதாக சீரியலை சன் டிவி இறக்குகிறது.
அந்த வகையில் பாண்டவர் பூமி தான் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. 1200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக வந்திருக்கிறது. அதனால் இதற்கு பதிலாக தான் பூவா தலையா என்ற சீரியல் போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் வானத்தைப்போல் சீரியலை பகலில் போட்டுவிட்டு அதற்குப் பதிலாக பிரேம் டைமில் புது நாடகத்தை போடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படி புதிதாக வர இருக்கும் பூவா தலையா நாடகத்தில் மெயின் கேரக்டரில் சித்தாரா நடித்திருக்கிறார். இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகை. அத்துடன் இதில் ஹீரோவாக கலர்ஸ் சேனலில் பச்சைக்கொடி நாடகத்தில் நடித்த ஹீரோ கிஷோர் நடித்திருக்கிறார். மேலும் ஹீரோயினாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்த ஸ்வேதா நடித்திருக்கிறார்.
இந்த நாடகம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் அன்பையும் பாசத்தையும் வைத்து வருகிறது. மேலும் வழக்கம்போல் கிராமத்துக் கதையாக இல்லாமல் நகரத்தில் ஏற்படக்கூடிய அன்றாட பிரச்சினைகளை கொண்டு வருகிறது. இந்த நாடகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சியில் சன் டிவி களம் இறங்கி இருக்கிறது.