சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிக் பாஸ் வீட்டை லவ்வர்ஸ் பார்க்காக மாற்றிய காதல் புறாக்கள்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா

BB7 Tamil Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி சீசனுக்கு சீசன் சண்டை, சச்சரவு, பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காதோ அப்படித்தான் காதல் கண்டன்டுக்கும் பஞ்சம் இருக்காது. போட்டியாளர்களுக்கு இடையே காதல் இல்லை என்றாலும் ஏடாகூடமாக டாஸ்க் கொடுத்து கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்து விடுவார் பிக் பாஸ். அதற்கு ஏற்றது போல் தான் சீசனுக்கு சீசன் ஜோடியும் வந்து அமையும்.

முதல் சீசனில் ஆரவ், ஓவியா காதல் ஜோடி கொடி கட்டி பறந்ததோடு அவர்களுடைய மருத்துவ முத்தமும் வைரலானது. ஒரு கட்டத்தில் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்காததால் டைட்டில் வாங்க வேண்டிய ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார். இரண்டாவது சீசனில் மகத், யாஷிகா ஆனந்த்திற்கு தன்னால் முடிந்த வரை நம்பிக்கையை கொடுத்துவிட்டு சாரி எனக்கு வெளியே ஆள் இருக்கு என்று டாடா காட்டினார்.

மூன்றாவது சீசனில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலை பிக் பாஸ் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. கவிலியா என்பது அவர்களுடைய தேசிய கீதம் ஆகவே இருந்தது. ஆனால் இந்த ஜோடி வீட்டை விட்டு வெளியே வந்ததுமே பிரேக் அப் செய்து கொண்டார்கள். இதில் கவின் திருமணமும் செய்துவிட்டார். நான்காவது சீசனில் பாலா மற்றும் சிவானியின் காதல் கதை ஓடியது.

ஐந்தாவது சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை அமீர் பாவனியை உருகி உருகி காதலித்து வந்தார். போட்டி முடிந்து வெளியே வந்ததும் காதலை பாவனி ஏற்றுக் கொண்டார். தற்போது இந்த ஜோடி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். ஆறாவது சீசனில் ஷிவின் கதிரை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் ப்ரீஸ் டாஸ்க்கில் கதிர் தன்னுடைய காதலியை ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டிற்கும் அறிமுகம் செய்து வைத்துவிட்டார்.

எல்லா சீசனிலும் போட்டியாளர்கள் உள்ளே வந்து தான் காதலில் லாக் ஆவார்கள். ஆனால் இந்த ஏழாவது சீசனில் ஏற்கனவே காதலித்து வந்த ரவீனா மற்றும் மணி உள்ளே வந்து தங்களுடைய ரொமான்ஸை அரங்கேற்றி வருகிறார்கள். இவர்களுடைய தொல்லை தாங்காமல் மணியை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தும் இவர்களுடைய சேட்டை குறையவில்லை.

கடந்த வாரத்தில் இருந்து நிக்சன் மற்றும் ஐஷு மீது பார்வையாளர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் பேசுவது காதல் ஜோடி போல் இருக்கிறது என கமெண்ட் செய்து வந்தார்கள். இதை உறுதிப்படுத்தும் படி இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இவர்கள் இருவரும் பேசும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது பிக் பாஸ் குழு. நிக்சன் காதலால் போட்டியை தவற விட்டுக் கொண்டிருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் பார்வையாளர்கள்.

- Advertisement -

Trending News