Leo Movie: கடந்த 19ஆம் தேதி ரிலீசான லியோ படம் முதல் நாளில் 148.5 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லாததால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வசூல் விவரத்தை வெளியிடாமல் சைலன்டாக இருந்தனர். லியோ படத்தின் வசூல் டல் அடிப்பதற்கு முக்கியமான ஐந்து காரணம் இருக்கிறது.
இந்த படம் பூஜா ஹாலிடேசில் ஓரளவு வசூல் ஆனது. ஆனால் இப்போது லியோ திரையிடப்படும் தியேட்டர்களில் ஈ ஆடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் இந்த படத்திற்கு இல்லாமல் போனது தான். ட்ரெய்லர் வெளியீட்டின் போது மொத்தமாய் செய்த அராஜகத்தால் தான் லியோவின் வசூல் பாலானது.
தேவையில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் லியோ ட்ரைய்லரை ரோகினி தியேட்டரில் திரையிட்டனர். அப்போது சந்தோஷத்தை வெளிக்காட்ட நினைத்த ரசிகர்கள் ரோகினி திரையரங்கை நாசம் செய்து விட்டனர். இதையெல்லாம் பார்த்த மக்களுக்கு லியோ படத்தை பார்க்க எப்படி தோன்றும், ‘இந்த படத்தை பார்க்க போனா உயிருக்கே உத்திரவாதம் இல்ல போல’ என்று குடும்ப ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர அஞ்சினார்கள்.
தொடக்கத்தில் தளபதி ரசிகர்களின் மத்தியில் ஆதரவு கிடைத்ததால் லியோ படத்திற்கு கோடி கோடியாக கலெக்ஷன் ஆனது. ஆனால் இப்போது வசூல் டல் அடிக்கிறது. ஒரு வேளை ஃபேமிலி ஆடியன்ஸின் சப்போர்ட் லியோ படத்திற்கு கிடைத்திருந்தால் இந்நேரம் வசூல் தாறுமாறாக பிச்சிகிட்டு போயிருக்கும். ஒரு வாரம் ஆகியும் 500 கோடியை தொடவே திணறிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் இந்த படத்தில் இரண்டாம் பாதி சொதப்பலாக இருந்தது. இதுவும் இந்த படத்தின் வசூல் மந்தமானதற்கு ஒரு காரணம். லியோ LCU கான்செப்டில் உருவாகி இருக்கிறது என்ற ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு லோகேஷ் எடுத்த கைதி, விக்ரம் படத்திருக்கும் முன்னாள் லியோ நிக்க கூட முடியல. அந்த அளவிற்கு கதை ஸ்ட்ராங்காக இல்லை.
இதில் ஏகப்பட்ட நடிகர்களை இணைத்து இருக்கின்றனர். ட்ரெயின்ல பாதியிலே ஏறி இறங்கி விடுவது போல் நிறைய நடிகர்கள் அவ்வப்போது வந்து கழண்டுகிறது ரசிகர்களை குழப்பம் அடைய வைத்தது. இதில் விஜய் போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனாக பிளாஷ்பேக்கில் நடித்த போது புகை பிடித்தல், மது அருந்துவதை அசால்ட்டாக செய்தார். இது இளம் சமூகத்தினருக்கு தவறான வழிகாட்டல்களை காட்டுவதாக சிலர் எண்ணினார்கள்.
ஏனென்றால் விஜய் எது செய்தாலும் அதை அப்படியே பின்பற்றக்கூடிய வெறித்தனமான ரசிகர்கள் அவரது பின்னால் இருக்கின்றனர். இதை யோசித்து அவர் இந்த படத்தில் சில விஷயங்களை ஊக்குவிக்காமல் இருந்திருக்கலாம். இந்த ஐந்து காரணங்கள் தான் லியோ படத்தின் வசூல் மந்தமானதற்கு முக்கியமாக அமைந்தது.