சுறா எறா சுத்து போட்டாலும் சிக்குற திமிங்கலமா அது.? வைரலாகும் கார்த்தியின் ஜப்பான் ட்ரெய்லர்

Japan Trailer: இந்த வருட தீபாவளி ட்ரீட்டாக கார்த்தியின் ஜப்பான் வெளிவர இருக்கிறது. ராஜுமுருகனுடன் கைகோர்த்து இருக்கும் அவர் ஏற்கனவே போஸ்டர், டீசர் மூலம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில் படகுழுவினரோடு சூர்யா, லோகேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் இது கார்த்தியின் 25 ஆவது படமாகும். அனு இம்மானுவேல், கே எஸ் ரவிக்குமார், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் நடித்திருக்கும் இதன் ட்ரெய்லர் இப்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே கார்த்தி திமிங்கலமாக மாறிய குட்டி மீன் என கதை சொல்வது போன்று ஆரம்பிக்கிறது. தன் அம்மாவுக்காக திருடனாக மாறும் அவர் போலீசுக்கே தண்ணி காட்டி விட்டு 200 கோடி பணத்தை ஆட்டையை போட்டு ஒரு கொலையையும் செய்கிறார். அதை தொடர்ந்து கேரளாவில் சுற்றும் அவருக்கு போலீஸ் வலை விரிக்கிறது.

இப்படி பரபரப்பாக நகரும் ட்ரெய்லரில் வசனங்களும் கவனம் ஈர்க்கிறது. அதிலும் சுறா எறா எல்லாம் சுத்து போட்டாலும் திமிங்கலம் சிக்காது, சிங்கத்துக்கு சீக்கு வந்தா பெருச்சாளி எல்லாம் ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதுமாம், சில சிச்சுவேஷன்ல நம்ம கைல எதுவுமே இல்லன்னா ஃபன் பண்ணனும் போன்ற டயலாக்குகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

இப்படி காமெடி, ஆக்சன் என எல்லாம் கலந்து வெளிவந்துள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாக வந்து ரசிக்க வைத்த கார்த்தி ஜப்பான் மூலம் தரமான சம்பவத்திற்கு தயாராகி உள்ளார். அவருக்கு இப்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.