Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே ரணகளமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் சண்டை பாதி கலாட்டா பாதி என இருந்தது. அதிலும் விஷ்ணு செய்த அலப்பறையால் குறும்படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இன்று 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருக்கின்றனர். ஏற்கனவே விஜய் டிவி இது பற்றிய ப்ரோமோவை அடிக்கடி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் கமலை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் அளவுக்கு வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோ புது போட்டியாளர்களின் வரவு, வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதை தெளிவாக காட்டியுள்ளது. அதிலும் விஷ பாட்டில்களான மாயா, பூர்ணிமா இருவரும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று கதறாத குறையாக முகத்தில் பீதியுடன் இருக்கின்றனர்.
மேலும் 5 பேர் வருவார்கள் என்பதை எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் இறுதியில் உச்சகட்ட அதிர்ச்சிக்கு சென்றதும், வீட்டை லாக் பண்ணுங்க உள்ள யாரையும் விடாதீங்க என்று கெஞ்சியதும் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. இதிலிருந்தே இனிவரும் நாட்களில் ஆட்டம் எந்த அளவுக்கு சூடு பிடிக்கப் போகிறது என்பதும் தெளிவாகப் புரிகிறது.
ஆக மொத்தம் இவ்வளவு நாட்கள் கடலை போடுவது, சாப்பாட்டுக்கு சண்டை போடுவது என அலப்பறை கொடுத்து வந்தவர்களுக்கு சரியான சம்பவம் காத்திருக்கிறது. அதிலும் இத்தனை நாள் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒரு பிளானோடு வருபவர்களை ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கமல் சாட்டையை சுழற்றி சவுக்கடி கொடுத்து வரும் நிலையில் இன்றைய எபிசோட் வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் வைல்டு கார்ட் என்ட்ரியை எப்படி சமாளிப்பது என பழைய போட்டியாளர்கள் பேயறைந்தது போல் நிற்கும் இந்த ப்ரோமோ ஆடியன்ஸை கலகலக்க வைத்திருக்கிறது.