செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்தியனுக்கு சாவே கிடையாது.. மிரட்டும் சேனாபதி, ரஜினி வெளியிட்ட இந்தியன் 2 வீடியோ எப்படி இருக்கு?

Indian 2 Intro Video: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 இப்போது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று தமிழில் இந்த வீடியோவை ரஜினி வெளியிட இருக்கிறார் என வந்த அறிவிப்பு மீடியாவையே கலக்கியது. மேலும் ராஜமவுலி, அமீர்கான், மோகன்லால், சுதீப் என மற்ற மாநில பிரபலங்களும் அந்தந்த மொழிகளில் இதை வெளியிட இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே ட்விட்டர் பக்கமே கதி என இருந்தனர்.

Also read: விடாது கருப்பு போல் ஆண்டவரை பிடித்த இந்தியன் 2.. சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குனர்

இப்படி பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திய அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே போன் அடிக்கிறது. அதில் பேசும் இந்தியன் தாத்தா எங்க தப்பு நடந்தாலும் அங்க நான் கண்டிப்பா வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து கல்லூரி, அரசு அலுவலகம் என அனைத்திலும் கேட்கப்படும் லஞ்சம் காட்டப்படுகிறது. இதில் பணக்காரர்கள் ஒரு பக்கம் பதுக்கி வைக்கும் பணமும் காட்டப்படுகிறது. இந்த அட்டகாசத்தினால் மக்கள் கம் பேக் இந்தியன் என சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்கின்றனர்.

Also read: எச்.வினோத் கதையில் உள்ள நச் லைன்.. உடனே கெட்டியாக பிடித்து கொண்ட கமல்

இப்படி பல அலப்பறைகளுக்கு நடுவில் சேனாபதி ஆரவாரமாக என்ட்ரி கொடுக்கிறார். அதிலும் வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக் என அவர் கூறுவது வேற லெவலில் இருக்கிறது. இதை பார்க்கும் போதே படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

Trending News