வாழ்த்துவது போல நெஞ்சை குத்தி கிழித்த பிரதீப்பின் பதிவு.. ஆண்டவருக்கே போட்ட குறும்படம்

Kamal-Pradeep: உலக நாயகன் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை ஒட்டு மொத்த திரையுலகமும் இப்போது கொண்டாடி வருகிறது. அவருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் பிக்பாஸ் பிரதீப்பும் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதுதான் இப்போது சோஷியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இவர் ட்விட்டர் தளத்தை ஆக்கிரமித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவரை தீர விசாரிக்காமல் கமல் வெளியேற்றியது தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நியாயம் வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் பிரதீப் கமலுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை குறும்படத்துடன் சொல்லி இருக்கிறார். அதாவது அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நான் உங்களுடைய பெரிய ரசிகன் சார், சத்தியமா சொல்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி வசூல்ராஜா படத்தில் கமல் செய்யும் ஒரு அட்ராசிட்டி வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அதில் நல்லா இருங்க, தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஷ் டேக்கை குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு வாழ்த்தை யாரும் சொல்லி இருக்கவே முடியாது. நெஞ்சை குத்தி கிழிக்கிற மாதிரி இருக்கு உங்க பதிவு என ஆரவாரம் செய்து வருகின்றனர்.

நேற்று கமலுடைய தக் லைஃப் பட டைட்டில் அறிவிப்பு மாஸாக வெளியான நிலையில் அவருக்கே ஒரு தக் லைஃப் காட்டி இருக்கிறார் பிரதீப். இதைத்தான் அவருடைய ஆர்மியினர் இப்போது ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர். ஆண்டவர் மட்டும் இதை பார்த்தால் நிச்சயம் நொந்து போய்விடுவார் என்ற கருத்துக்களும் ஒரு பக்கம் கிளம்பி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஆண்டவருக்கே குறும்படம் போட்ட பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவாரா என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அவர் நிச்சயம் அந்த ஒரு தப்பை மட்டும் மீண்டும் செய்ய மாட்டார். இருந்தாலும் இவருக்கு நடந்த அநியாயத்திற்கு கமல் இந்த வாரம் வைக்கப் போகும் விளக்கம் என்ன என்பதுதான் இப்போது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

kamal-pradeep
kamal-pradeep
vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →