This Week OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் எவ்வளவு படங்கள் வெளியானாலும் ஓடிடி வெளியாகும் படங்களை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான், விக்ரம் பிரபு நடிப்பில் உருவான இறுகப்பற்று ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் இந்த வாரம் 5 படங்கள் வெளியாகிறது. அபிஷேக் பச்சன், சயாமி கொர் ஆகியோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் கூமர் படம் உருவாகி இருந்தது. இந்தப் படம் நவம்பர் 10ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயதீப் சர்க்கார் இயக்கத்தில் உருவான ரெயின்போ ரிஷ்டா படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிநேத்ரா ஹல்தார் கும்மாராஜு சனம் சவுத்ரி மற்றும் அனீஸ் சைகியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பீப்பா என்ற படம் அமேசான் பிரைமில் பத்தாம் தேதி வெளியாகிறது.
வரலாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் இஷான் கட்டர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் லேபிள் என்ற வெப் தொடர் உருவாகி இருந்தது.
இதில் ஜெய், மகேந்திரன் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தி ரோட் படம் ஆஹா தளத்தில் வெளியாகிறது.
திரிஷாவுக்கு லியோ படம் எவ்வளவு பெயர் வாங்கி கொடுத்ததோ அதே அளவுக்கு தி ரோட் படமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவ்வாறு ஒரு வலுவான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த வருடம் திரிஷாவுக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து வரும் நிலையில் விடாமுயற்சி, தக் லைஃப் ஒப்பந்தமாகி இருக்கிறார்.