இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 3 அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. நான்காவது அணியாக எந்த நாடு உள்ளே செல்லும் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்பு இருந்த வேலையில் இப்பொழுது நடப்பதை பார்த்தால் எல்லாமே பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக மாறுகிறது.
கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி வெளியே சென்று விடும் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் அந்த அணிக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பது போல் சாதகமாக நிறைய விஷயங்கள் நடக்கிறது. நியூசிலாந்துடன் 401 ரண்களை அடித்து ஜெயிப்பதற்கு மழை உதவி செய்தது.
அதேபோல் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா உடனான போட்டியில் வெற்றி பெறும் இடத்திலிருந்து திடீரென ஆப்கானிஸ்தான் அணி வீழ்ந்தது. தனியாளாக கிளன் மேக்ஸ்வெல் 201 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை ஜெயிக்க வைத்தார். இப்படி பாகிஸ்தான் பக்கமே அனைத்தும் சாதகமாக மாறுகிறது.
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் இன்னும் நான்காவது இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாளை நடைபெறும் இலங்கையுடனான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 10 பாயிண்ட் பெரும். அதேபோல் இங்கிலாந்து உடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 10 பாயிண்ட் பெரும். சவுத் ஆப்பிரிக்காவுடன், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும்.
இனிமேல் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு போவதற்கு, அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த வார இறுதியில் கிட்டத்தட்ட அரையிறுதி போட்டிகள் முடிவாகிவிடும். பாகிஸ்தான் செமி பைனல் வந்து விட்டால் இந்தியாவுடன் தான் மோதும்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுடன் வெற்றி பெற்ற பின் அந்த அணி வீரர் ரஷீத் காணுடன் இந்திய முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் இந்தியாவுடன், பாகிஸ்தான் வென்றால் தான் அதேபோல் நடனம் ஆடுவேன் என பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் கங்கணம் கட்டிமுகமது அமீர்ரஷீத் காணுக் கொண்டிருக்கிறார்.