Bigg Boss Pradeep and Kamal: இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு ரணகளமாக வெடித்துக் கொண்டு சீசன் 7 வருகிறது. அதுவும் பிரதீப் உள்ளே இருக்கும் பொழுது இருந்த விறுவிறுப்பை விட ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய பிறகுதான் சோசியல் மீடியாவே தெறிக்கும் அளவிற்கு ரணகளப்படுத்தி வருகிறது.
முக்கியமாக இத்தனை வருஷ சினிமா காலங்களில் எடுத்து வைத்த பெயரும் புகழையும் மொத்தமாக டேமேஜ் ஆகும் அளவிற்கு கமலின் பிறந்தநாள் என்று கூட பார்க்காமல் ஒவ்வொருவரும் அவரை வச்சு செய்கிறார்கள். இதில் பிரதீப் மீது தவறு இருக்கோ இல்லையோ அது இரண்டாவது விஷயம். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட காது கொடுத்து கேட்க முடியாத ஒரு தலைவரால் எப்படி சரியான தீர்ப்பை கொடுக்க முடியும்.
அத்துடன் ஒருதலை பட்சமாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார் என்றும், முழுக்க முழுக்க மாயா கும்பலுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்து வருகிறார். இதுவரை இவர் மீது இருந்த நம்பிக்கையை மொத்தமும் கெடுக்கும் அளவிற்கு கமலின் தீர்ப்பு இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Also read: மாட்டிக்கிட்டே பங்கு இந்த அவமானம் தேவையா.! நிக்சனின் கேவலமான புத்தியை குறும்படம் போட்ட பிக்பாஸ்
அதே நேரத்தில் பிக் பாஸிலும் அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் பிரதீப்புக்காக வாதாடி வரும் விஷயமும் தற்போது பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. அத்துடன் இதுவரை மாயா அங்கு இருப்பவர்களை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்து ஓவராக ஆட்டம் போட்டார். அவருக்கு சரியான ஆப்பு வைக்கும் விதமாக இவர்கள் 3 பேரும் தற்போது பதிலடிக் கொடுத்து வருகிறார்கள்.
அதிலும் தினேஷ் நீங்க மட்டும் ஆண்களை வைத்து கேலி, கிண்டல் பண்ணலாம். இதுவே ஒரு ஆண் பண்ணி இருந்தால் அவர்களுக்கு ஒரு முத்திரையை குத்தி வெளியே அனுப்பி விடுகிறீர்கள். இதில் எங்க நியாயம் இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். அதே மாதிரி தற்போது வந்த ப்ரோமோ படி ஐஷு மற்றும் மாயா, விஜே பிராவோ பற்றி தவறாக பேசி இருக்கிறார்கள்.
இதைப் பற்றி கேட்டதற்கு சும்மா ஜாலிக்காக தான் பண்ணினோம் என்று சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் மாயா அவருடைய கேங் மூலம் தேவையில்லாமல் பிரதீப் மீது அவதூறு குற்றச்சாட்டை வைத்து வெளியே அனுப்பி விட்டார். ஆனாலும் ரெட் கார்டு பிரதீப் வாங்கி இருந்தாலும் தற்போது அவருக்கு ரெட் கார்பெட் கொடுத்து வரவேற்கும் அளவிற்கு மக்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதுல தெரிஞ்சோ தெரியாமலோ பிரதீப்புக்கு கமல் மூலம் ஒரு புகழ் கிடைத்துவிட்டது.
Also read: ஆமா நீங்க பெரிய உலக அழகி.. பிக்பாஸ் சூனியக்கார கும்பலை வெளுத்து விட்ட தினேஷ்