சினிமா செய்திகள்

பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் சிம்பு.. அமைதி காத்த பட குழு, அதிரடியாக இணைந்த 5000 ஆர்டிஸ்ட்!

தமிழ் சினிமாவே மிரண்டு போகும் அளவுக்கு தயாராகும் சிம்புவின் படம்.

By · 09 நவ் 2023 · Updated 15 ஏப் 2025
Baahubali-simbu

Simbu Movie Update: மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கிய சிம்பு இப்போது இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த பாகுபலி தரமான படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சுமார் 5000 ஆர்டிஸ்ட் இவருடன் இணைந்துள்ளனர்.

சிம்பு தனது 48வது படத்தில் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்காகவே சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்.

STR 48 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்கப் போவதாக சொன்னார்கள், ஆனால் இப்போதைக்கு இல்லை. காரணம் இந்தப் படம் பாகுபலி போல ஹிஸ்டோரிகள் படம். இந்த படத்தை பாகுபலி அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்குகிறார்கள். இந்தப் படத்தில் 5000-க்கு மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிக்கிறார்களாம்.

அவர்களுக்கு தேவையான டிரஸ், மேக்கப் போன்ற விஷயங்கள் ரெடி பண்ண லேட் ஆகுதாம். அதனால்தான் இந்த படப்பிடிப்பு இப்போதைக்கு துவங்காமல் தள்ளிப் போடுகின்றனர். அது மட்டுமல்ல இந்த படத்தை தமிழ் சினிமாவை மிரண்டு போகும் அளவுக்கு எடுக்க போகிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து பின்பு தான் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என பட குழு அமைதி காக்கிறது. மேலும் இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் தான் துவங்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் சிம்பு சில பயிற்சிகளை இன்னும் முடிக்கவில்லை. மேலும் கதையிலும் சில விஷயங்களை தேசிங்கு பெரியசாமி மெருகேற்றி வருவதால், அடுத்த வருடத்தில் படப்பிடிப்பை துவங்க போவதாக காரணம் சொல்லப்படுகிறது.