தீர விசாரிப்பதே மெய்.. சோலியை முடிக்க வரும் பிரதீப், பின்வாங்கும் ஆண்டவர்

Biggboss 7-Pradeep: இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மாயா கேங் செய்யும் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் கொதித்துப் போன ரசிகர்கள் அவர்களுக்கான குறும்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி ஏகப்பட்ட புகார்களை கூறி இதை ஆண்டவர் இந்த வார இறுதியில் கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பிரதீப் விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவருக்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் முந்தின சீசன் போட்டியாளர்களும் இப்போது களத்தில் குதித்துள்ளனர்.

மேலும் இதில் கமல் பாராபட்சம் பார்த்து விட்டார் எனவும் நிச்சயம் இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் பதறிப் போன பிக் பாஸ் டீம் இப்போது பிரதீப்பிடம் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதியான செய்திகள் கிடைத்துள்ளது.

அதன்படி இந்த வார இறுதியில் பிரதீப்பை பிக் பாஸ் மேடைக்கு அழைத்து வர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர் தரப்பு நியாயத்தை விளக்கவும் அதற்கு மாயா கேங் என்ன பதிலளிக்க போகிறது எனவும் காட்டப்பட இருக்கிறது. இதற்கான வேலையில் தான் இப்போது விஜய் டிவி தீவிரமாக இறங்கியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தால் ஆண்டவரின் இமேஜ் இப்போது மொத்தமும் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதற்காக சில வேலைகளையும் சேனல் தரப்பு செய்து வருகிறதாம். கமலும் இப்போது தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி சர்ச்சையை சரி செய்ய இருக்கிறாராம்.

அதேபோன்று மீண்டும் வீட்டுக்குள் பிரதீப்பை அனுப்பும் திட்டமும் இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் பிரதீப் இனிமேல் பிக்பாஸ் பக்கம் தலை வைத்து கூட படுக்க விரும்பவில்லையாம். இருந்தாலும் தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க அவர் மேடை ஏற இருக்கிறார். அந்த வகையில் அவர் மாயா கூட்டத்தின் சோலியை முடிக்கும் வார இறுதி நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →